இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் சேர தகுதி மதிப்பெண்கள்

எழுத்தின் அளவு :

Print

அரசு ஒதுக்கீட்டின் கீழ், ஒற்றை சாளர முறையில் கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள். அண்ணாப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கும் இதே தகுதிகளை குறைந்தபட்சத் தகுதிகளாக அரசு அறிவித்துள்ளது.

பொதுப்பிரிவினர்:   கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் குறைந்தது 55 சதவீதம்.


பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (கிறிஸ்தவர்கள்), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்கள்):  கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் குறைந்தது 50 சதவீதம்.


மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர்:  கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் குறைந்தது 45 சதவீதம்.


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்:  கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us