புல்பிரைட்-நேரு உதவித்தொகைகள் -2025 | Kalvimalar - News

புல்பிரைட்-நேரு உதவித்தொகைகள் -2025மார்ச் 19,2024,00:00 IST

எழுத்தின் அளவு :

திறன்மிக்க இந்தியர்களை ஊக்கப்படுத்துவம் வகையில் பல்வேறு பிரிவுகளில் அமெரிக்க இந்திய கல்வி அறக்கட்டளை உதவித்தொகை திட்டங்களை வழங்குகின்றன. மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு தனித்தனியே உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.



அதன்படி, பல்வேறு தரப்பினருக்கும் 2025ம் ஆண்டிற்கான புல்பிரைட் உதவித்தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.



புல்பிரைட்-நேரு உதவித்தொகை:


* புல்பிரைட்-நேரு டாக்டோரல் ரிசர்ச் உதவித்தொகை


* புல்பிரைட்-நேரு அகாடமிக் அண்டு புரொபஷனல் எக்ஸ்செலன்ஸ் உதவித்தொகை


* புல்பிரைட்-நேரு சர்வதேச கல்வி நிர்வாகத்தினருக்கான கருத்தரங்கு


* புல்பிரைட்-நேரு விசிட்டிங் சேர் திட்டம் - இமொரி பல்கலைக்கழகம்


* புல்பிரைட்-நேரு விசிட்டிங் சேர் திட்டம் - மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகம்


* புல்பிரைட்-நேரு போஸ்ட் டாக்டோரல் ரிசர்ச் உதவித்தொகை 


* புல்பிரைட்-நேரு விசிட்டிங் சேர் திட்டம் 



புல்பிரைட்-கலாம் கிளைமேட் உதவித்தொகை:


* புல்பிரை-கலாம் கிளைமேட் பெல்லோஷிப்ஸ் பார் டாக்டோரல் ரிசர்ச்


* புல்பிரை-கலாம் கிளைமேட் பெல்லோஷிப்ஸ் பார் போஸ்ட் டாக்டோரல் ரிசர்ச்


* புல்பிரை-கலாம் கிளைமேட் பெல்லோஷிப்ஸ் பார் அகடமிக் அண்டு புரொபஷனல் எக்ஸ்செலன்ஸ் 



இதர உதவித்தொகை திட்டங்கள்:


* ஹூபர்ட் எச். ஹம்ப்ரி பெல்லோஷிப் திட்டம்


* புல்பிரைட் பாரின் லேங்குவேஜ் டீச்சிங் அசிஸ்டெண்ட் திட்டம்


* புல்பிரைட் சர்வதேச ஆசிரியர்களுக்கான கற்பித்தல் திட்டத்தில் சிறப்புமிக்க விருதுகள்


* புல்பிரைட் சிறந்த கற்பித்தல் மற்றும் சாதனைத் திட்டம்


* புல்பிரைட் ஸ்காலர்-இன்-ரெசிடென்ஸ் திட்டம் போன்ற உதவித்தொகை திட்டங்களிலும் துறை சார்ந்த திறனாளர்கள் விண்ணப்பிக்கலாம்.


* புல்பிரைட் ஸ்பெசலிஸ்ட் புரொகிராம்




உதவித்தொகை விபரம்: ஜே- 1 விசா, அமெரிக்க சென்று திரும்புவதற்கான விமான பயணச்சீட்டு, கல்விக் கட்டணம், தங்கும் செலவு, மருத்துவக் காப்பீடு உட்பட பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன.



விண்ணப்பிக்கும் முறை:


www.usief.org.in எனும் அமெரிக்க-இந்திய கல்வி அறக்கட்டளையின் இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலமாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும். 




தேர்வு செய்யப்படும் முறை: 


கல்வித்தகுதி, தொழில்முறை செயல்பாடுகள், தொடர்பியல் திறன், தேசிய சேவை உணர்வு, அமெரிக்காவில் கல்வி, பயிற்சி மற்றும் ஆய்வு மேற்கொள்வதற்கான தேவை, தலைமைப் பண்பு, நோக்கம் உட்பட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.



விண்ணப்பிக்க கடைசி நாள்: உதவித்தொகை திட்டத்தைப் பொறுத்து விண்ணப்பத்திற்கான இறுதி தேதி மாறுபடுகிறது. 



விபரங்களுக்கு: https://www.usief.org.in/Fellowships/Fellowships-for-Indian-Citizens.aspx



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us