என்.எப்.எஸ்.யு., மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

என்.எப்.எஸ்.யு., மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக செயல்படும் தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகம் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.




வளாகங்கள்: குஜராத், டெல்லி, கோவா, திரிபுரா, போபால், புனே, குவகாத்தி, மணிப்பூர், தார்வாடு மற்றும் உகாண்டா ஆகிய இடங்களில் இப்பல்கலைக்கழகத்தின் கல்வி வளாகங்கள் செயல்படுகின்றன. 



படிப்புகள்: 


எம்.எஸ்சி., - பாரின்சிக் சயின்ஸ்


எம்.எஸ்சி., - பாரின்சிக் பயோடெக்னாலஜி


எம்.ஏ., - மாஸ் கம்யூனிகேஷன் அண்டு பாரின்சிக் ஜர்னலிசம்


எம்.எஸ்சி., - டாஜிகாலஜி


எம்.டெக்., - சைபர் செக்யூரிட்டி


எம்.டெக்., - ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் அண்டு டேட்டா சயின்ஸ்


எம்.எஸ்சி.,-டிஜிட்டல் பாரின்சிக்ஸ் அண்டு இன்பர்மேஷன் செக்யூரிட்டி


பி.எஸ்சி.,-எல்எல்.பி.,(ஹானர்ஸ்): 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பு


பி.பி.ஏ.,-எல்எல்.பி.,(ஹானர்ஸ்): 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பு


எல்எல்.எம்., - கிரிமினல் லா மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ் அட்மினிஸ்ட்ரேஷன்


எல்எல்.எம்., - சைபர் லா மற்றும் சைபர் கிரைம் இன்வெஸ்டிகேஷன்


எம்.பி.ஏ., - பாரின்சிக் அக்கவுண்டிங் மற்றும் பிராடு இன்வெஸ்டிகேஷன்


எம்.பி.ஏ., - பிசினஸ் அனலட்டிக்ஸ் மற்றும் இன்டெலிஜென்ஸ்


எம்.பி.ஏ., - ஹாஸ்பிட்டல் மற்றும் ஹெல்த்கேர் மேனேஜ்மெண்ட்


எம்.பி.ஏ., - சைபர் செக்யூரிட்டி மேனேஜ்மெண்ட்


உட்பட பல்வேறு இளநிலை, முதுநிலை, முதுநிலை டிப்ளமா மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன.



தகுதிகள்: படிப்பிற்கு ஏற்ப உரிய கல்வித் தகுதிகளை பெற்றிருப்பதோடு, சட்டப் படிப்புகளில் சேர்க்கை பெற கிளாட் தேர்வும், எம்.பி.ஏ., படிப்புகளில் சேர்க்கை பெற கேட் - 2023 அல்லது நேஷனல் பாரின்சிக் அட்மிஷன் டெஸ்ட் - என்.எப்.ஏ.டி., 2024 தேர்வும் எழுதியிருக்க வேண்டும். பெரும்பாலான படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை என்.எப்.ஏ.டி., 2024  தேர்வு அடிப்படையிலேயே நடைபெறுகிறது. 




விண்ணப்பிக்கும் முறை: https://admission.nfsu.ac.in/ எனும் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். 



விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 10



விபரங்களுக்கு: www.nfsu.ac.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us