நீட் தேர்வு - 2024 | Kalvimalar - News

நீட் தேர்வு - 2024

எழுத்தின் அளவு :

இந்தியாவில் உள்ள எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் மருத்துவ பட்டப்படிப்புகளை படிக்க அவசியம் எழுத வேண்டிய தேர்வு, நீட் எனும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு.



மத்திய கல்வி அமைச்சகத்தின் அனுமதியுடன் செயல்படும் தேசிய தேர்வு முகமை - என்.டி.ஏ., இத்தேர்வை கடந்த 2019ம் ஆண்டு முதல் நடத்துகிறது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் - யு.ஜி., தேர்வும், முதுநிலை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கு நீட் - பி.ஜி., தேர்வும் எழுத வேண்டும். நீட்- யு.ஜி., தேர்வு எழுத விரும்பும் மாணவ, மாணவியர் தற்போது விண்ணப்பிக்கலாம்.



படிப்புகள்: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.எஸ்.எம்.எஸ்., பி.யு.எம்.எஸ்., மற்றும் பி.எச்.எம்.எஸ்.,



தேர்வு முறை: இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடங்களில் தலா 50 கேள்விகள் வீதம் மொத்தம் 200 கேள்விகள் இடம் பெறும். ஒவ்வொரு பாடப்பிரிவிலும் பிரிவு ‘ஏ’வில் கேட்கப்படும் 35 கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும். பிரிவு ‘பி’ல் கேட்கப்படும் 15 கேள்விகளில் 10 கேள்விகளுக்கு மட்டும் விடை அளித்தால் போதுமானது. 



ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். இவ்வாறு, பாடத்திற்கு தலா 180 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். கேள்விகள் அனைத்தும் மல்டிபில் சாய்ஸ் வடிவிலேயே இடம்பெறும்.




கேள்வித் தாள்கள்: ஆங்கிலம், ஹிந்தி, அஸ்ஸாமீஸ், பெங்காலி, குஜராத்தி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஒடியா, தமிழ், தெலுங்கு, உருது, பஞ்சாபி ஆகிய மொழிகளில் கேள்விகள் இடம்பெறும். 



தேர்வு நேரம்: பிற்பகல் 2 - 5:20 மணிவரை. மொத்தம் 200 நிமிடங்கள்.



விண்ணப்பிக்கும் முறை: https://neet.ntaonline.in/frontend/web/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.



விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 9




தேர்வு நடைபெறும் நாள்: மே 5



விபரங்களுக்கு: https://exams.nta.ac.in/NEET#



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us