சி.எம்.ஐ., | Kalvimalar - News

சி.எம்.ஐ.,

எழுத்தின் அளவு :

கணிதம், கணினி அறிவியல், இயற்பியல் ஆகிய துறை சார்ந்த படிப்புகளை வழங்குவதோடு, ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் முன்னணி கல்வி நிறுவனம் சி.எம்.ஐ., எனும் சென்னை மேத்மெடிக்கல் இன்ஸ்டிடியூட்!




முக்கியத்துவம்


ஸ்பிக் அறிவியல் அறக்கட்டளையால் 1989ம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்வி நிறுவனம் 1996ம் ஆண்டு தன்னாட்சி அங்கீகாரமும், 2006ம் ஆண்டு பல்கலைக்கழக அங்கீகாரமும் பெற்றது. பொது மற்றும் தனியார் நிதி உதவியுடன் இயங்கும் இக்கல்வி நிறுவனம், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியை இணைக்கும் வகையில் பாடத்திட்டங்களை வடிவமைத்துள்ளது.



படிப்புகள்:


பி.எஸ்சி., (ஹானர்ஸ்) - கணிதம் மற்றும் கணினி அறிவியல் - 3 ஆண்டுகள்


பி.எஸ்சி., (ஹானர்ஸ்) - கணிதம் மற்றும் இயற்பியல் - 3 ஆண்டுகள்


எம்.எஸ்சி., - கணிதம் - 2 ஆண்டுகள்


எம்.எஸ்சி., - கணினி அறிவியல் - 2 ஆண்டுகள்


எம்.எஸ்சி., - தரவு அறிவியல் - 2 ஆண்டுகள்


பிஎச்.டி., - கணிதம்


பிஎச்.டி., - கணினி அறிவியல்


பிஎச்.டி., - இயற்பியல்



தகுதிகள்:


பி.எஸ்சி., படிப்புகளுக்கு 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.எஸ்சி., படிப்புகளில் சேர துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டப்படிப்பும், பிஎச்.டி., படிப்புகளுக்கு துறை சார்ந்த பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பும் படித்திருக்க வேண்டும்.



மாணவர் சேர்க்கை முறை:


கல்வி நிறுவனத்தால் நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வு அடிப்படையில் பி.எஸ்சி., மற்றும் எம்.எஸ்சி., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 


பிஎச்.டி., - இயற்பியல் படிப்பில் சேர ஜாயின்ட் என்ட்ரன்ஸ் ஸ்கீரினிங் டெஸ்ட் - ஜெஸ்ட், யு.ஜி.சி.-சி.எஸ்.ஐ.ஆர்.,- நெட் அல்லது கேட் தேர்வு எழுத வேண்டியது அவசியம். பிஎச்.டி.,-கணினி அறிவியல் படிப்பிற்கு ஜெஸ்ட் தேர்வும், பிஎச்.டி.,-கணித படிப்பிற்கு என்.பி.எச்.எம்., தேர்வும் எழுத வேண்டும்.




நுழைவுத் தேர்வு மையங்கள்:


சென்னை, மதுரை, கோவை, திருச்சி, பெங்களூரு, கொல்கத்தா, புதுடில்லி, மும்பை, திருவனந்தபுரம், ஹைதராபாத் உட்பட பல்வேறு நகரங்களில் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.



விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 15



நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: மே 19



விபரங்களுக்கு: www.cmi.ac.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us