நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, வாராங்கல்

எழுத்தின் அளவு :

இந்திய அரசு உயர்கல்விக்காக உருவாக்கப்பட்ட என்.ஐ.டி.,களில், ஆந்திராவில் உள்ள வாராங்கல், என்.ஐ.டி., யும் ஒன்று. இக்கல்வி நிறுவனம், மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவால் 1959ம் ஆண்டு துவக்கப்பட்டது. மாணவர்களுக்கு சிறந்த கல்வியை தொடர்ந்து வழங்கி வருகிறது.

அனுபவமிக்க ஆசிரியர்கள், நவீன கட்டமைப்பு வசதிகள், தங்கும் விடுதிகள், மருந்தகம், இன்டர்நெட் வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் லேப், ஆய்வகங்கள், 5.65 கோடி மதிப்புடைய புத்தகங்களை கொண்ட நூலகம், சிறந்த வேலைவாய்ப்பு, உலகளவில் உள்ள சிறந்த தொழில்நுட்ப கல்வி
நிறுவனங்களுக்கு இணையான கல்வி, ஐ.ஐ.டி., க்கு இணையான பாடங்கள் போன்ற வசதிகளை பெற்றுள்ளது.

இக்கல்வி நிறுவனம் ஐதராபாத்திலிருந்து 140 கி.மீ., தொலைவில், ஐதராபாத்  வராங்கல் தேசிய நெடுஞ்சாலையில், 248 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மாணவர்களுக்கு பட்டப் படிப்போடு, தற்போதைய நடைமுறைக்கு ஏற்ப தொழில்நுட்ப பயிற்சியையும் வழங்குகிறது. இளநிலை பட்டப்படிப்பில் சேரும் மாணவர்கள் ஒவ்வொருவரும் முதல் இரண்டு செமஸ்டர் வரை என்.சி.சி., , என்.எஸ்.எஸ்., மற்றும் என்.எஸ்.ஓ., போன்றவற்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை பெறுகிறார்கள்.

இந்தியா டுடே ஆய்வின் படி 2009ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த இன்ஜினியரிங் கல்லூரிகளில் 13வது இடத்தையும், டைம்ஸ் ஆப் இந்தியா ஆய்வின் படி 8வது இடத்தையும் பெற்றுள்ளது.

பாடப்பிரிவுகள்:
பி.டெக்., படிப்புகள்  (4 வருடம்)
பி.டெக்., (சிவில் இன்ஜினியரிங்)
பி.டெக்., (எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்)
பி.டெக்., (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்)
பி.டெக்., (சிவில் இன்ஜினியரிங்)
பி.டெக்., (எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன்)
பி.டெக்., (கெமிக்கல் இன்ஜினியரிங்)
பி.டெக்., (மெட்டீரியல் இன்ஜினியரிங்)
பி.டெக்., (கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்)
பி.டெக்., (பயோடெக் இன்ஜினியரிங்)
பிளஸ் 2 படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் ஏ.ஐ.இ.இ.இ., நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் பி.டெக்., படிப்புக்கு தேர்வு செய்யப்படுவர்.
எம்.டெக்., படிப்புகள்  (2 வருடம்)
எம்.டெக்., (டிரான்ஸ்போர்டேசன் இன்ஜினியரிங்)
எம்.டெக்., (ஜியோ டெக்னிக்கல் இன்ஜினியரிங்)
எம்.டெக்., (ரிமோட் சென்சிங்)
எம்.டெக்., (என்விரான்மென்டல் இன்ஜினியரிங்)
எம்.டெக்., (பவர் சிஸ்டம் இன்ஜினியரிங்)
எம்.டெக்., (டிசைன் மற்றும் புரடக்ஷன் இன்ஜினியரிங்)
எம்.டெக்., (எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ரூமென்டேசன்)
எம்.டெக்., (வி.எல்.எஸ்.ஐ., சிஸ்டம் டிசைன்)
எம்.டெக்., (கெமிக்கல் இன்ஜினியரிங்)
எம்.டெக்., (கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்)
பி.டெக்., படிப்பு மற்றும் கேட் நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் எம்.டெக்., படிப்புக்கு தேர்வு செய்யப்படுவர்.
எம்.எஸ்சி., படிப்புகள்  (2 வருடம்)
எம்.எஸ்சி., (அப்ளைடு கணிதம்)
எம்.எஸ்சி., (கணிதம் மற்றும் சயின்டிபிக் கம்ப்யூட்டிங்)
எம்.எஸ்சி., (இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி)
எம்.எஸ்சி., (இன்ஜினியரிங் இயற்பியல்)

இதர படிப்புகள்:
எம்.பி.ஏ.,  2 வருடம்
எம்.சி.ஏ.,  3 வருடம்
பிஎச்.டி., படிப்புகள் அனைத்து இன்ஜினியரிங் பாடப்பிரிவுகளுக்கும் பிஎச்.டி., படிப்பு வசதிகள் உள்ளன.

வேலைவாய்ப்பு:
இக்கல்வி நிறுவனம், இங்கு படிக்கும் மாணவர்களுக்கு படிக்கும் போதே வேலைவாய்ப்பு கிடைப்பதற்குரிய வசதிகளை சிறந்த முறையில் செய்து வருகிறது. சாப்ட்வேர், தொழிற்சாலைகள், மேலாண்மை போன்ற பிரிவுகளில் மாணவர்கள் வேலைவாய்ப்பை பெறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 120 முதல் 150 நிறுவனங்கள் இக்கல்வி நிறுவனத்தின் வளாகத்தேர்வில் பங்கேற்கின்றன. மேலும் விபரங்களுக்கு www.nitw.ac.in என்ற என்.ஐ.டி.,யின் வெப்சைட்டை பார்க்கவும்.

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us