நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ராய்பூர்

எழுத்தின் அளவு :

இக்கல்வி நிறுவனம் கனிமம் மற்றும் உலோகம் போன்ற துறைகளுக்காக, கனிமம் மற்றும் உலோகம் அரசுக் கல்லூரி என்ற பெயரில் 1956ம் ஆண்டு, அப்போதைய இந்திய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்தால் அடிக்கல் நாட்டி துவக்கப்பட்டது. கல்வி நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று 1963ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

2005ம் ஆண்டு மத்திய அரசால், இக்கல்வி நிறுவனத்துக்கு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கல்விச் சேவையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. தற்போது இக்கல்வி நிறுவனத்தில் 12க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. பாடப்பிரிவுகளோடு அத்துறைக்கான தொழில்துறை பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. டிஜிட்டல் நூலகம், கம்ப்யூட்டர் லேப், ஆராய்ச்சி லேப், விளையாட்டு மைதானங்கள், தங்கும் விடுதிகள் (5 மாணவர் விடுதி, 1 மாணவியர் விடுதி), கலந்துரையாடல் போன்ற வசதிகள் உள்ளன.

பாடப்பிரிவுகள்
இளநிலை படிப்புகள் ( 4 வருடம்)
பி.டெக்., (உலோக இன்ஜினியரிங்)
பி.டெக்., (மைனிங் இன்ஜினியரிங்)
பி.டெக்., (சிவில் இன்ஜினியரிங்)
பி.டெக்., (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்)
பி.டெக்., (எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்)
பி.டெக்., (கெமிக்கல் இன்ஜினியரிங்)
பி.டெக்., (ஆர்க்கிடெக்சர்)
பி.டெக்., (எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகாம் இன்ஜினியரிங்)
பி.டெக்., (இன்பர்மேசன் டெக்னாலஜி)
பி.டெக்., (கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்)
பி.டெக்., (பயோ மெடிக்கல் இன்ஜினியரிங்)
பி.டெக்., (பயோ டெக்னாலஜி)

தேர்வு முறை: இக்கல்வி நிறுவனத்தில் 12 இளநிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இப்படிப்புகளில் சேருவதற்கு, பிளஸ் 2 படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தேசிய அளவில் நடத்தப்படும் ஏ.ஐ.இ.இ.இ., நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் இப்படிப்புகளுக்கு தேர்வு செய்யப்படுவர்.

முதுகலை படிப்புகள் (2 வருடம்)
எம்.டெக்., (அப்ளைடு ஜியாலஜி)
எம்.டெக்., (கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்)
எம்.இ., (வாட்டர் ரிசோர்சஸ்)
எம்.இ., (எனர்ஜி சிஸ்டம்)
எம்.இ., (கெமிக்கல் பிராசஸ் டிசைன்)
எம்.சி.ஏ.,  மூன்று வருடம்

தேர்வுமுறை: இங்கு 6 முதுகலை பாடப்பிரிவுகள் உள்ளன. இப்படிப்புகளில் சேருவதற்கு பி.டெக்., படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கேட் நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். பிஎச்.டி., படிப்புகள்: பல்வேறு பாடப்பிரிவுகளில் பிஎச்.டி., படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

வேலைவாய்ப்புகள்
இக்கல்வி நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கென தனித்துறை ஒன்று செயல்பட்டு வருகிறது. இத்துறையின் சார்பில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சிகள் சிறப்பான முறையில் அளிக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் இக்கல்வி நிறுவனத்தில் நடக்கும் வளாகத்தேர்வில் நாட்டின் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியான மாணவர்களை தேர்வு செய்கின்றன. கனிமம் மற்றும் உலோக துறை மாணவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பு வசதிகள் உள்ளன.

மேலும் விபரங்களுக்கு www.nitrr.ac.in என்ற கல்வி நிறுவனத்தின் வெப்சைட்டை பார்க்கவும்.

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us