மாணவர்களின் கேள்விகளுக்கு கலாம் பதில்கள் (14)

எழுத்தின் அளவு :

கல்விமலர் இணையதளம் வழியாக மாணவர்கள், வாசகர்கள் அனுப்பிய கேள்விகளுக்கு டாக்டர் அப்துல் கலாம் இ-மெயில் வழியாக அனுப்பிய பதில்கள் இதோ!


 


நான் ஜனாதிபதி ஆக வேண்டும் என்று விருப்பப்படுகிறேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?


-சல்மான், ஹோலிகிராஸ் பள்ளி, சென்னை


-ராமகிருஷ்ணன், இன்ஸ்டிடியூட் ஆப் ரோட் டிரான்ஸ்போர்ட் டெக்னாலஜி, ஈரோடு


கலாம்: இது நல்ல கனவு. உங்களுடைய செயல்களில் 100 சதவீத முயற்சி செய்யுங்கள். ஏதாவது ஒரு துறையில் சிறந்தவராக வாருங்கள். இடையில் சில தோல்விகள் வந்த போதிலும் அது பற்றி வருத்தப்படாதீர்கள். இறைவன் உங்களுக்கு துணை நிற்பார்.


 


ஜனாதிபதி அப்துல் கலாமுக்கும் விஞ்ஞானி அப்துல்கலாமுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?


-விஷ்ணு, வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, முகப்பேர்


-பவித்ரா, கபாலீஸ்வரர் நகர், நீலாங்கரை, சென்னை


கலாம்: இரு பணிகளிலுமே நான் கடின உழைப்பையே அளிக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் இரண்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.




ஏன் செவ்வாய் கிரகம் சிவப்பாக இருக்கிறது?


-ஜேம்ஸ் மார்ட்டின், பெடிட் செமினேர் மேனிலைப்பள்ளி, புதுவை


கலாம்: பெர்ரிக் ஆக்சைடு எனும் இரும்பின் துரு செவ்வாய் கிரகத்துக்கு சிவப்பு நிறம் அளிக்கிறது. செவ்வாயின் மேற்புறத்தில் உள்ள இரும்பும் மற்ற தனிமங்களும் ஆக்சைடுகளாக மாறியுள்ளன. செவ்வாய் துரு நிறைந்த ஒரு கோளாக உள்ளது. சிவப்பு நிறத்தால் போருக்கான ரோமக்கடவுளான மார்ஸ் பெயரே இக்கோளுக்கு இடப்பட்டது.

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us