நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிய முடியுமா? கலாம் பதில் (16)

எழுத்தின் அளவு :

தினமலர் கல்விமலர் இணையதளம் வழியாக மாணவர்கள் மற்றும் வாசகர்கள் அனுப்பிய கேள்விகளுக்கு டாக்டர் அப்துல் கலாம் பதில்.


உங்கள் ரோல்மாடல் யார்?
- ஜெயந்தி, ஸ்ரீராமசாமி நாயுடு மெமோரியல் கல்லூரி, 
  சாத்தூர்
என்னுடைய ரோல் மாடல் பேராசிரியர் சதீஷ் தவான். அவரது தலைமைப்பண்புகள் என்னைக் கவர்ந்தது. முக்கியமான பணிகளை மேற்கொண்டிருக்கும் போது, பிரச்னைகள் வரும். அந்த பிரச்னைகளை தோற்கடித்து நாம் வெற்றி பெற வேண்டும் என்று என்னிடம் அவர் கூறினார்.



நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிய முடியுமா?
- கணேஷ்ராம், பனிமலர் இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை
ராணுவ படைகள் மற்றும் இடர்பாடு மேலாண்மைத் துறையினர் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று, உதவி வருகிறார்கள். நாம் நிலநடுக்கம் வருவதை
முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியுமானால், சேதத்தை குறைக்கலாம். இதற்கான ஆராய்ச்சி துவங்கிவிட்டது. இடர்பாடு நிர்வாகத்துறையினர் சேத அளவை குறைக்கவும், நிவாரணப் பணியில் ஈடுபடவும் செய்கின்றனர். விஞ்ஞானிகளும் முன்னெச்சரிக்கை அறிவிப்புக்கான கருவிகளை உருவாக்கி வருகின்றனர். இது பேரிழப்புகளை தவிர்க்கும் என்று எதிர்பார்க்கலாம்.



ஹீலியம் - 3 எந்த அளவுக்கு நமக்குப் பயன்படும்?
- அன்புச்செல்வன், டால்பின் மெட்ரிக் பள்ளி, பொன்மேனி, மதுரை
சந்திரனில் ஹீலியம் -3 பெருமளவில் உள்ளது. எரிபொருளுக்கான மிக நேர்த்தியான மூலப்பொருள் இது. நல்ல ஆற்றல் அதே சமயம் சுற்றுச்சூழலை
மாசுபடுத்தாது. கதிர்வீச்சு இருக்காது. 21ம் நூற்றாண்டுக்கான எரிபொருள் இது என்று எல்லோரும் வரவேற்கிறார்கள்.

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us