மாணவர்களின் கேள்விகளுக்கு கலாம் பதில்கள் (4)

எழுத்தின் அளவு :

தினமலர் கல்விமலர் இணையதளம் வழியாக மாணவர்கள் மற்றும் வாசகர்கள் அனுப்பிய கேள்விகளுக்கு டாக்டர் அப்துல் கலாம் இ-மெயில் வழியாக பதில் அனுப்பியுள்ளார்.


விண்வெளி வீரர் ஆவதற்கு நான் எந்த பிரிவு பாடத்தை படிக்க வேண்டும்?
- கோகுல், சாந்தோம் மேல்நிலை பள்ளி, சென்னை
- சண்முகராஜ், சின்மயா வித்யாலயா மேல்நிலை பள்ளி, சென்னை
- தமிழ் அரசி, இமாகுலேட் ஹார்ட் ஆப் மேரி மேல்நிலை பள்ளி, புதுச்சேரி
- திருநாவுக்கரசு, பூர்ணம்விஸ்வநாத், ஆதிபராசக்தி இன்ஜினியரிங் கல்லூரி, மேல்மருவத்தூர்
- காமாட்சி, ஸ்ரீலதாங்கி வித்யா மந்திர், கோவை


வான் இயற்பியல் பாடத்தை முதன்மையாகக் கொண்டுள்ள முதுநிலை படிப்பை படிப்பது, விண்வெளி வீரர் ஆவதற்கான தகுதிகளைப் பெற்றுத்தரும்.



விமானவியல் படித்து விஞ்ஞானி ஆக ஆசை. இத்துறைக்கு எதிர்காலம் உள்ளதா?
- முகமதுஅப்துல் ரஹ்மான், சாம்ஸ் இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை
- கோகுல் அமிர்தா வித்யாலயம், கோவை
- கவுசிக் சுந்தரராஜன், அகோபிலமட ஓரியன்டல் மேல்நிலை பள்ளி, சென்னை
-ராஜேஸ்வர், ஆஸ்ரம் ஐ.சி.எஸ்.இ., டி.ஏ.எஸ்.எஸ்.சி., பள்ளி, சென்னை
- தானியா, சி.இ.ஓ.ஏ., மாஸ்டர்ஸ் ஸ்கூல், மதுரை
- குமரகுரு, பாரதி மெட்ரிக் பள்ளி, கோவை
- வினோத், குமரகுரு இன்ஜினியரிங் கல்லூரி, கோவை


பிளஸ் 2வில் இயற்பியல், வேதியல் மற்றும் கணிதம் படித்த பின், பி.இ., படிப்பில் விமானவியல் துறையை படிக்கலாம். விமானத்துறை மற்றும் விண்வெளித் துறையில் இத்துறைக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவிலேயே சொந்த போர் விமானங்கள் தயாரிக்கிறோம். 50 -90 இருக்கைகள் கொண்ட பயணிகள் விமானங்கள் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பும் நடந்து கொண்டுள்ளன. விண்வெளியில் நாம் அடுத்ததாக செவ்வாய் கிரகத்துக்கு செல்ல விருக்கிறோம். எனவே இத்துறையில் சிறந்த விஞ்ஞானியாக ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும். தேர்வு பயத்தை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
- திலீபன், ஸ்ரீவி லயன்ஸ் மெட்ரிக் பள்ளி, ஸ்ரீவில்லிப்புத்தூர்
- சுகன்யா, பாஸ்கோ அகடமி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, சென்னை
- ஆஷா, முத்தையா அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோட்டையூர்
- ஜகதீஸ், ஸ்ரீவேணுகோபால் வித்யாலயா, சென்னை
- சந்தோஷ்குமார், லட்சுமி நகர், போரூர்


உங்கள் படிப்புடன் விளையாட்டு, இசை, கலை மற்றும் கலாச்சார விஷயங்களில் பங்கு கொள்ளுங்கள். படிப்பதற்காக நன்றாக திட்டமிட்டுக் கொள்ளுங்கள். படிக்கும்போது உங்கள் சிந்தனைகளை படிப்பில் மட்டுமே முழுமையாக செலுத்துங்கள். நீங்கள் இதை தொடர்ந்து செய்யும் போது உங்களுக்கு போதுமான அறிவு வளரும். அப்போது தேர்வு பயம் வராது. நீங்கள் மிகச்சிறப்பாக மதிப்பெண் எடுப்பீர்கள்.

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us