மதுவந்தி (பிளஸ் 2 மாவட்ட 5 ம் இடம்) | Kalvimalar - News

மதுவந்தி (பிளஸ் 2 மாவட்ட 5 ம் இடம்)

எழுத்தின் அளவு :

தமிழை முதல் பாடமாக எடுத்து மாவட்ட அளவில் எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மாணவி மதுவந்தி ஐந்தாமிடம் பெற்றுள்ளார். இவர் பெற்ற மதிப்பெண் விபரம்: தமிழ் 186, ஆங்கிலம் 190, கணிதம் 200, இயற்பியல் 199, வேதியியல் 200, கம்ப்யூட்டர் சயின்ஸ் 199. இவர் அடுத்தபடியாக பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க விரும்புகிறார்.

இவர் கூறுகையில், தேர்வுக்கு இரண்டு மாதம் முன்பிருந்தே பழைய கேள்வித்தாள்களுக்கு விடையளித்து பயிற்சி பெற்றேன். வீட்டில் டைம் செட் செய்து தேர்வு எழுதினேன். விடைத்தாள்களை பள்ளி ஆசிரியர்கள் சலிக்கால் திருத்தி உதவினர். ஒவ்வொரு தேர்வுக்குப் பின்னும் அம்மா பள்ளி ஆசிரியர்களைக் கண்டு குறைகளை கேட்டறிந்தார். இரவு 12.30 மணி வரை படிப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன். ஓராண்டாக டிவி, சினிமா பார்ப்பதில்லை. இதனால் படிக்க நிறைய நேரம் கிடைத்தது, என்றார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us