ஜிமேட் தேர்வு | Kalvimalar - News

ஜிமேட் தேர்வுஏப்ரல் 23,2018,00:00 IST

எழுத்தின் அளவு :

உலகில் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் வணிகம் அல்லது மேலாண்மை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் எழுத வேண்டிய நுழைவுத்தேர்வு, கிரஜூவட் மேனேஜ்மென்ட் ஆட்மிஷன் டெஸ்ட் எனும் ‘ஜிமேட்’.

முக்கியத்துவம்
உலகம் முழுவதிலும் உள்ள 100க்கும் மேற்பட்ட நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ள இத்தேர்வு, கணினி வழித்தேர்வாக மட்டுமே நடைபெறுகிறது. இந்தத் தேர்வின் மொத்த மதிப்பெண் 800. இதில், மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் சிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும்.

பிரிவுகள்: அனலிட்டிக்கல் ரைட்டிங், இன்டக்ரேட்டட் ரீசனிங், குவான்டிடேடிவ் மற்றும் வெர்பல் ஆகிய 4 முக்கிய பிரிவுகள் உள்ளன. விருப்பத்திற்கு ஏற்ப இந்த நான்கு பகுதிகளையும் தேர்வு எழுதும் மாணவர்களே, வரிசைப்படுத்திக் கொள்ளும் ‘செலக்சன் ஆடர்’ எனும் புதிய நடைமுறையை இத்தேர்வை நடத்தும், ‘ஜிமேக்’ அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது.

தகுதி: இந்தத் தேர்வினை எழுத வயது வரம்பு ஏதுமில்லை. இளநிலை பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதுமானது. வேறு எந்தச் சிறப்பு தகுதிகளும் இல்லை.

சேர்க்கை முறை: சில கல்வி நிறுவனங்கள் ‘ஜிமேட்’ தேர்வில் மாணவர்கள் பெறும் மொத்த மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. சில கல்வி நிறுவனங்கள், இந்த நான்கு பிரிவுகளில் குறிப்பிட்ட ஒன்றோ அல்லது இரண்டு பிரிவுகளுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் அளித்து மாணவர் சேர்க்கை நடத்துகின்றன. ஆகையால், மாணவர்கள், எந்தக் கல்லூரியில் சேர்க்கை பெற விரும்புகிறீர்களோ அந்தக் கல்லூரியின் சேர்க்கை முறைக்கேற்ப தேர்விற்கு தயாராவது சிறந்தது!

தேர்வு முறை:
பிரிவு: அனலிட்டிக்கல் ரைட்டிங்
கேள்விகள்: 1 தலைப்பு
நேரம்: 30 நிமிடம்

பிரிவு: இன்டக்ரேட்டட் ரீசனிங்
கேள்விகள்: 12 கேள்விகள்
நேரம்: 30 நிமிடம்

பிரிவு: குவான்டிடேடிவ்
கேள்விகள்: 31 கேள்விகள்
நேரம்: 62 நிமிடம்

பிரிவு: வெர்பல் ரீசனிங்
கேள்விகள்: 36 கேள்விகள்
நேரம்: 65 நிமிடம்
மொத்த தேர்வு நேரம்: 3:30 மணி நேரம் (இடைவேளை உட்பட)

இந்தத் தேர்வின் மதிப்பெண்கள், ஐந்து ஆண்டுகள் வரை செல்லும். ஒருவர் எத்தனை முறை வேண்டுமென்றாலும் இந்தத் தேர்வை எழுதலாம். ஒரு வருடத்திலேயே 30 நாட்கள் இடைவேளையில், 5 முறை இந்தத் தேர்வை எழுத முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: குறிப்பிட்ட விண்ணப்ப தேதிகள் எதுவும் இல்லை. அடுத்த 6 மாதங்களில் உள்ள எந்தத் தேர்விற்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

விபரங்களுக்கு: www.gmac.com

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us