பிரான்சில் இலவச ஏரோஸ்பேஸ் படிப்பு | Kalvimalar - News

பிரான்சில் இலவச ஏரோஸ்பேஸ் படிப்புடிசம்பர் 06,2019,00:00 IST

எழுத்தின் அளவு :

ஏரோநாட்டிக்ஸ் துறை சார்ந்த படிப்பை வழங்கும் சர்வதேச அளவிலான சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்று, பிரான்ஸ் நாட்டின் ஐ.எஸ்.ஏ.இ.,-சுபெரோ! இக்கல்வி நிறுவனத்தில், உதவித்தொகையுடன் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் படிப்பிற்கு இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.



படிப்பு: மாஸ்டர் ஆப் சயின்ஸ் இன் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்



வேலை வாய்ப்பை எளிதில் பெறும் வகையில் நவீன பாடத்திட்டத்துடன், தியரி மட்டுமின்றி செயல்முறை பயிற்சியுடன் இந்த இரண்டு ஆண்டுகால படிப்பு வழங்கப்படுகிறது. இப்படிப்பை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு தொடர்ந்து ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் வாய்ப்பும் எளிதாகிறது.



தகுதிகள்: 



* மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மெக்கட்ரானிக்ஸ், ஏரோஸ்பேஸ், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் சிஸ்டம்ஸ், டெலிகம்யூனிகேஷன்ஸ் போன்றவற்றில் ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டம் பெற்றவர்கள். 



* கணிதம் அல்லது இயற்பியல் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றவர்களும் இப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.



* டோபல் ஐ.பி.டி., ஐ.இ.எல்.டி.எஸ்., கேம்ப்ரிட்ஜ் போன்ற ஆங்கில மொழிப்புலமை பரிசோதனை தேர்வுகளில் ஏதெனும் ஒன்றில் குறிப்பிட்ட மதிப்பெண் பெற்றிருப்பதும் அவசியம்.



உதவித்தொகை:


எம்.பி.டி.ஏ., மற்றும் இந்தியாவிற்கான பிரான்ஸ் தூதரகம் இணைந்து வழங்கும் உதவித்தொகை திட்டத்தின்கீழ், இப்படிப்பை மேற்கொள்ளும் இந்திய மாணவர்களுக்கு ஆண்டுக்கு 8 ஆயிரம் யூரோ உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இதன்படி, கல்விக் கட்டணம், ஒருவழி விமானக் கட்டணம், விசா, தங்குமிடம் ஆகியவை அடங்கும். 



இதர படிப்புகள்: ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் படிப்பிற்கு மட்டுமின்றி அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கும் புகழ்பெற்ற இக்கல்வி நிறுவனம், 15 அட்வான்ஸ்டு மாஸ்டர்ஸ் படிப்புகளையும், 6 ஆராய்ச்சி படிப்புகளையும், இதர திறன் வளர்ப்பு பயிற்சிகளையும் வழங்குவது குறிப்பிடத்தக்கது.



விபரங்களுக்கு: https://candidatures.isae.fr/


Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us