எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., அட்மிஷன் | Kalvimalar - News

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்க்கை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.




கல்வித்தகுதி: நீட் யு.ஜி., - 2023 தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.



வயது வரம்பு: மாணவர் சேர்க்கை நாள் அல்லது டிசம்பர் 31, 2023 தேதி நிலவரப்படி, 17 வயது நிரம்பி இருக்க வேண்டும். 



கல்வி நிறுவனங்கள் மற்றும் இடங்கள்:



தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற அனைத்து மருத்துவக் கல்லூரிகள்.



* அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 85 சதவீத சேர்க்கை இடங்கள்.


* தமிழகத்தில் உள்ள சுயநிதி மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்கள்


* இ.எஸ்.ஐ.சி., மருத்துவ கல்லூரி - கே.கே. நகர்


* வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியில் உள்ள 30 சதவீத இடங்கள் உட்பட விதிமுறைக்குட்பட்ட அனைத்து மருத்துவ இடங்கள் தமிழக மருத்துவ கலந்தாய்வு வாயிலாக நிரப்பப்படுகின்றன. 



குறிப்பு: தமிழகத்தில் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை இடங்கள் இவற்றில் அடங்காது.



கலந்தாய்வு முறை: தமிழக அரசின் ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனியாகவும், தனியார் கல்லூரிகள் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனியாகவும் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இரண்டிலும் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.



விண்ணப்பிக்கும் முறை: https://ugreg23.tnmedicalonline.co.in/ug/ எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு பிரிவினர்களின் கீழ் விளையாட்டு வீரர்களுக்கான சேர்க்கைக்கு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.



விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 12



விபரங்களுக்கு: www.tnhealth.tn.gov.in மற்றும் 


www.tnmedicalselection.org



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us