புதிய ஆன்லைன் படிப்பு | Kalvimalar - News

புதிய ஆன்லைன் படிப்பு

எழுத்தின் அளவு :

சென்னை ஐ.ஐ.டி.,யின் சென்டர் பார் அவுட்ரீச் அண்ட் டிஜிட்டல் எஜுகேஷன், கட்டுமானத் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மையில் ஆன்லைன் வாயிலான சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தி உள்ளது.




முக்கியத்துவம்: வரும் ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மற்றும் கட்டடங்களை மேம்படுத்துவதில் நம் நாட்டில் கணிசமான அளவுக்கு முதலீடு இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில், குறைந்த செலவில் உரிய நேரத்தில் கட்டி முடித்தல், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், மிக உயர்ந்த தரத்தை பேணுதல் ஆகியவை அவசியமாகின்றன. மேலும், தொழில்நுட்பம், மேலாண்மை நடைமுறைகள் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்களை அறிந்துகொள்வதும் அவசியம். அந்த வகையில் இப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.




தகுதி: இப்படிப்பில் சேர குறிப்பிட்ட தகுதிகள் எதுவும் இல்லை என்ற போதிலும், கட்டடக்கலை, சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அல்லது மேலாண்மை ஆகிய துறை சார்ந்தவர்கள் வரவேற்கப்படுகின்றனர்.



பயிற்சி நேரம்: 126 மணி நேரத்திற்கு பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் வகுப்புகள் மற்றும் 42 மணி நேரம் பேராசிரியர்களுடனான ஆன்லைன் நேரடி கலந்துரையாடல்.



பாடத்திட்டங்கள்:


1. பொறியியல் பொருளாதாரம்


2. கான்கிரீட் தொழில்நுட்பம்


3. சாலை மற்றும் நடைபாதை தொழில்நுட்பம்


4. கட்டுமானத் திட்டமிடல் மற்றும் கட்டுப்பாடு


5. கட்டுமான செயல்முறைகள் - உற்பத்தித்திறன்


6. தரம்


7. ஆயுட்காலம் மற்றும் பழுதுகள்


8. பாதுகாப்பு


9. கட்டுமான காண்ட்ராக்ட்கள்


10. குறைந்த வளத்திற்கு ஏற்ப திட்டமிடலை செம்மையாக்குதல்



விண்ணப்பிக்கும் முறை: முற்றிலும் ஆன்லைன் வாயிலாக வழங்கப்படும் இப்படிப்பிற்கு சென்னை ஐ.ஐ.டி., இணையதளம் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டும்.



கல்விக் கட்டணம்: ஒரு லட்சம் ரூபாய். இம்மாதம் 31க்குள் சேர்க்கை பெறுபவர்களுக்கு ரூ.70 ஆயிரமாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 20 



விபரங்களுக்கு: https://code.iitm.ac.in/construction-technology-and-management




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us