அறிவோம் நாட்டா! | Kalvimalar - News

அறிவோம் நாட்டா!பிப்ரவரி 26,2020,08:46 IST

எழுத்தின் அளவு :

நாடு முழுவதிலும் உள்ள எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும், ஆர்க்கிடெக்சர் எனும் கட்டடக்கலை துறையில் இளநிலை பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கை பெற எழுதவேண்டிய முக்கிய 


தேர்வு நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் ஆர்கிடெக்சர்!



கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர்’ நடத்தும் இந்த தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், பி.ஆர்க., படிப்பில் சேர்க்கை நடத்தப்படுகிறது.  மேலும், படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து, இக்கவுன்சிலில் பதிவு செய்தால் மட்டுமே ஒரு ’ஆர்க்கிடெக்ட்’ ஆக பணிபுரிய முடியும். 



படிப்பு: பேச்சுலர் ஆப் ஆர்க்கிடெக்சர் (பி.ஆர்க்.,)



கல்வி நிறுவனங்கள்: 


பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.,),  நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (என்.ஐ.டி.,), தன்னாட்சி கல்வி நிறுவனங்கள், அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் என இந்தியாவில் ஆர்க்கிடெக்சர் படிப்பை வழங்கும் 465 கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற ‘நாட்டா’ மதிப்பெண் முக்கியத்துவம் பெறுகிறது.



தகுதிகள்:


12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் படித்திருக்க வேண்டும் அல்லது கணித பாடத்துடன் டிப்ளமா படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும். இவற்றில் எதுவாயினும், குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



தேர்வு முறை:


மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு 3.15 மணி நேர கால அவகாசத்துடன் இத்தேர்வு நடத்தப்படுகிறது. முதல் பிரிவில், 125 மதிப்பெண்ணிற்கு மாணவர்களின் வரைதல் திறன் பரிசோதிக்கப்படுகிறது. அடுத்த பிரிவில், இயற்பியல், வேதியியல், கணிதம், ஜென்ரல் ஆப்டிடியூட் மற்றும் லாஜிக்கல் ரீசனிங் ஆகியவற்றில், அப்ஜெக்டிவ் டைப் வகையில், 75 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம்பெறும். 



குறிப்பு: 


இத்தேர்வு இரண்டு முறை நடத்தப்பட உள்ளது. பல்வேறு காரணங்களால், குறிப்பிட்ட நாளில் முதல் தேர்வை எழுத முடியாதவர்கள் அல்லது முதல் தேர்வில் பெறும் மதிப்பெண்களை விட, அதிக மதிபெண் விரும்பும் நோக்கில் மீண்டும் இத்தேர்வை எழுத விரும்பும் மாணவர்களுக்காக, இரண்டு முறை இத்தேர்வு நடத்தப்பட உள்ளது. 



விண்ணப்பிக்கும் முறை:


நாட்டா தேர்விற்கான அதிகாரப்பூர்வ வலைத்தளம் வயிலாக, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.



முதல் தேர்வு நாள்: ஏப்ரல் 19


விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 16



இரண்டாம் தேர்வு நாள்: மே 31


விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 4



விபரங்களுக்கு: http://www.nata.in/



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us