ஒரே பெண் குழந்தைக்கான கல்வி நிதி உதவித்திட்டம் | Kalvimalar - News

ஒரே பெண் குழந்தைக்கான கல்வி நிதி உதவித்திட்டம்

எழுத்தின் அளவு :

ஒரே பெண்குழந்தை கொண்ட குடும்பத்தினருக்கு இந்திரா காந்தி ஸ்காலர்ஷிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த கல்வி நிதி உதவித் திட்டத்தின் படி 1200 மாணவிகளுக்குட்பட்ட மேற்படிப்பு படிக்க மாதம் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.

அளவான குடும்பத்தை வலியுறுத்தும் வகையிலும், பெண்குழந்தைகளை ஊக்கப்படுத்தும் விதத்திலும் இந்த திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை ஆலோசனையின் பேரில் பல்கலைக்கழக மானியக்குழு இந்த நிதி உதவித் திட்டத்தை அறிமுகம் செய்தது.

விண்ணப்பிக்கும் மாணவி தங்கள் பெற்றோருக்கு ஒரே குழந்தையாக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில், தொழில்முறை அல்லாத இரண்டாண்டு முதுகலை படிப்புகளுக்கு 20 மாதங்கள் உதவித் தொகை வழங்கப்படும்.

இந்த உதவித் தொகைக்கு தேர்வு செய்யப்படும் மாணவிகளிடமிருந்து பயிற்சிக் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. இதுதொடர்பான மேலும் விரிவான தகவல்களைப் பெற http://www.ugc.ac.in/financialsupport/IG_SGC_guideline.pdf

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us