செல்லுலர் மற்றும் மாலிகியூலர் பயாலஜி மையம் | Kalvimalar - News

செல்லுலர் மற்றும் மாலிகியூலர் பயாலஜி மையம் ஜூலை 21,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

அறிமுகம்:

கடந்த 1977 , ஏப்ரல் 1 ஆம் தேதி பாதி-சுயாட்சி நிறுவனமாக, அப்போதைய ஆராய்ச்சி ஆய்வகத்தின் (இன்றைய இந்திய வேதியியல் தொழில்நுட்ப கழகம்) பயோகெமிஸ்ட்ரி பிரிவை கொண்டு ஐதராபாத்தில் தொடங்கப்பட்டது. 1981-82 ஆம் ஆண்டுகளில் இது முழுஅளவிலான தேசிய ஆராய்ச்சி ஆய்வகமாக அங்கீகரிக்கப்பட்டது.

நோக்கம்:

*  நவீன உயிரியல் துறையில் பலவித ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, அந்த துறையில் புதிய ஆய்வுகளை வரவேற்பது.

*  உயிரியலின் பல்வேறு துறைகளில் புதிய மற்றும் நவீன நுட்பங்களுக்கு மையப்படுத்தப்பட்ட வசதிகளை வழங்குதல், அந்த வசதிகள் முறைப்படுத்தப்பட்டதா என்பதை உறுதி செய்தல், அந்த வசதிகள் ஆய்வாளர்களால் முழுஅளவில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணித்தல்.

*  உயிரியலின் நவீன துறைகளில் ஆய்வுகளை மேம்படுத்த, மற்ற கல்வி நிறுவனங்களிலுள்ள ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல்.

இந்நிறுவனத்தின் சிறப்புகள்:

*  UNESCO -வின் மாலிகியூலர் மற்றும் செல் பயாலஜி -இன் உலகளாவிய துறையால், ஒரு "அறிவுத்திறன் மையமாக" CCMB தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

*  மேலும் மூன்றாம் உலக அறிவியல் அகடமி விருதை பெற்றதோடல்லாமல், ஆராய்ச்சி & பயிற்சியில் நுண்ணறிவுக்கான தெற்கு மையம் என்ற பெயரையும் பெற்றுள்ளது.

*  DNA பிங்கர்பிரிண்ட் -இல் மேற்கொண்ட ஆய்வுக்காக, உயிரியல் அறிவியலில், CSIR தொழில்நுட்ப விருதை பெற்றது.

*  அறிவியல் & தொழில்நுட்ப துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக, இந்திய சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் மற்றும் தொழில்துறை(FICCI) விருதை பெற்றது.

ஆராய்ச்சி:

இந்த நிறுவனம் மூன்று விதமான பெரிய ஆராய்சிகளில் ஈடுபடுகிறது.

1. நவீன உயிரியலின் முக்கிய பகுதிகளில் உயர்தர அடிப்படை ஆய்வு

2. சமூக தேவைகளின் அடிப்படையிலான ஆராய்ச்சி

3. பயோடெக்னாலஜி மற்றும் பயோமெடிசின், ஜெனடிக்ஸ் மற்றும் பரிணாமங்கள், செல்உயிரியல் மற்றும் மேம்பாடு, மாலிகியூலர்உயிரியல், பயோகெமிஸ்ட்ரி மற்றும் பயோபிசிக்ஸ், ஜெனோமிக்ஸ் மற்றும் பயோஇன்பர்மேடிக்ஸ் போன்ற துறைகளில் தேவை சம்பந்தமான ஆராய்ச்சி.

சேவைகள்:

*  மாலிகியூலர் டயக்னோசிஸ்

*  குரோமோசோமல் டயக்னோசிஸ்

*  ஜெனடிக் கவுன்சலிங்

*  DNA பிங்கர்பிரிண்டிங்

போன்ற துறைகளில் இந்நிறுவனம் சேவை புரிகிறது.

CCMB வழங்கும் படிப்புகள்:

பி.எச்டி மாணவர்களுக்கு, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துடன்  இணைந்து பயிற்சியளிக்கிறது. மேலும் பி.எச்டி முடித்த மாணவர்களுக்கும், CSIR, பயோடெக்னாலஜி துறை மற்றும் டெல்லியிலுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை ஆகியவற்றின் உதவியுடன் பயிற்சியளிக்கிறது.

இவைதவிர,

1. பயோடெக்னாலஜி  மற்றும் பயோமெடிசின்

2. ஜெனடிக்ஸ் மற்றும் பரிணாமம்

3. செல் பயாலஜி மற்றும் மேம்பாடு

4. மாலிகியூலர் பயாலஜி

5.  பயோகெமிஸ்ட்ரி மற்றும் பயோபிசிக்ஸ்

6.  தோற்று நோய்கள்

7.  பயோஇன்பர்மேடிக்ஸ் மற்றும்     தியோரேடிகல்பயாலஜி

போன்றவை உள்ளிட்ட பல தலைப்புகளில் பி.எச்டி ஆராய்ச்சிக்கான ஊக்கமும் பயிற்சியும் வழங்கப்படுகின்றன.

பி.எச்டி மற்றும் அதை முடித்த மாணவர்களுக்கான பயிற்சிகள் மட்டுமல்லாது, தொடர்ச்சியான வொர்க்ஷாப்கள், ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி கடைசி வாரத்தில், 2 - வார சர்வதேச பயிற்சி முகாம் மற்றும் ஒவ்வொரு வருடமும் பலவித தொழில்நுட்ப விழிப்புணர்வு முகாம்கள் போன்றவையும் CCMB -ஆல் நடத்தப்படுகின்றன. 

CCMB -இல் மாணவர்களுக்கான வசதிகள் மற்றும் வளங்கள்:

*  உயர்நிலை தரத்தில் மேம்படுத்தப்பட்ட ஆய்வகங்கள்

*  அற்புதமான கணினி வசதி

*  பலவிதமான புத்தகங்கள், கிராமப்புற மேம்பாடு சம்பந்தமான ஆலோசனைகள் மற்றும் செய்திகளை உள்ளடக்கிய ஜர்னல்கள் மற்றும் பத்திரிக்கைகள் போன்றவைகளைக் கொண்ட பிரமாண்டமான நூலகம்.

*  சௌகரியமான தங்குமிட வசதி

*  உலகத்தரம் வாய்ந்த அரங்க வசதிகள்

*  பலவகை உணவுகளைக் கொண்ட தரமான உணவு விடுதிகள் 

*  பொழுதுபோக்கு வசதிகள்

மேலும் CCMB, இறுதிவருட M.sc  /M.Tech. /M. Pharm  /B.E.(Biotechnology) / B.Tech. (Biotechnology) மாணவர்களுக்கு ப்ராஜெக்ட் பயிற்சிகளை வழங்குகிறது.

இவைத்தவிர JRF எனப்படும் Junior  Reasearch  Fellowship  ஆய்வு வசதியும் இங்கு வழங்கப்படுகிறது.

CCMB நிறுவனத்தின் முழு முகவரி:

Centre for Cellular & Molecular Biology
Habsiguda, Uppal Road
Hyderabad - 500 007
Andhra Pradesh, India

Telephone: +91 40 27160222-31, 27160232-41
Fax: +91 40 27160591, 27160311
   

              

 

 

 

 

   

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us