பி.எஸ்சி. பயோடெக்னாலஜி படித்தவர்கள் எம்.எஸ்சி. படிப்பது அவசியமா?செப்டம்பர் 13,2010,00:00 IST
பயோடெக்னாலஜி துறையின் வேலை வாய்ப்புகள் பட்டப்படிப்பு முடிப்பவரை விட பட்ட மேற்படிப்பு முடித்து மேலும் ஆய்வுக்குச் செல்பவருக்குத் தான் அதிகம் இருக்கிறது. படிக்கும் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப்பட்டு அதில் தேர்வு செய்யப்பட்டால் பிரச்னை இல்லை.
எம்.எஸ்சி., படிப்பையும் ஒருவர் சுமாராகப் படித்து 50 முதல் 60 சதவீத மதிப்பெண்களை பாடத்தில் நல்ல திறனில்லாமல் முடிக்கும் போது அதனால் அவருக்கு வேலை கிடைக்கப் போவதில்லை. இதை மனதில் கொண்டு முடிவு செய்யுங்கள். இன்றைய சூழலில் தகுதிகளுக்கு என எந்த வேலையும் கிடையாது. திறன்கள் தான் முக்கியம். பாடத்தில் நல்ல திறனில்லாத போது கூடுதல் திறன்களை வளர்த்துக் கொள்வதே புத்திசாலித்தனம் என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படுங்கள்.