மும்பையிலுள்ள சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேஷன்ஸில் குறுகிய கால டிப்ளமோ படிப்பு படித்து கம்யூனிகேஷன்ஸ் துறையில் பணி புரிய விரும்புகிறேன். இதில் என்னென்ன படிப்புகள் தரப்படுகின்றன? | Kalvimalar - News

மும்பையிலுள்ள சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேஷன்ஸில் குறுகிய கால டிப்ளமோ படிப்பு படித்து கம்யூனிகேஷன்ஸ் துறையில் பணி புரிய விரும்புகிறேன். இதில் என்னென்ன படிப்புகள் தரப்படுகின்றன?செப்டம்பர் 21,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

ஜர்னலிசம் மாஸ் கம்யூனிகேஷன்ஸ், பப்ளிக் ரிலேஷன்ஸ்  கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ், அட்வர்டைசிங் மார்க்கெட்டிங், டிஜிடல் அனிமேஷன், டிவி வீடியோ புரடக்ஷன் ஆகியவற்றில் இந்த நிறுவனம் டிப்ளமோ படிப்புகளைத் தருகிறது. இவற்றில் நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக மட்டுமே சேர முடியும்.

இது தவிர பப்ளிக் ஸ்பீக்கிங், பிராட்காஸ்டிங்கம்பியரிங்டப்பிங், போட்டோகிராபி, ரேடியோ ஜாக்கி, கிரியேடிவ் ரைட்டிங் போன்றவற்றில் சான்றிதழ் படிப்புகளும் நடத்தப்படுகின்றன. இவை அனைத்துமே நேரடி படிப்புகள் தான். பொதுவாக ஜூன் மாதம் படிப்புகள் தொடங்கப்படுகின்றன. மிகச் சிறந்த கல்வி நிறுவனம் என்பதால் கடும் போட்டி இருக்கிறது. முழு விபரங்களை அறிய இன்டர்நெட் முகவரி http://www.xaviercomm.org

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us