பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் முடிக்கவிருக்கிறேன். எம்.காம்., அஞ்சல் வழியில் சேர்ந்து கொண்டு அதே நேரம் பி.எல்.ஐ.எஸ்., எனப்படும் லைப்ரரி சயின்ஸ் படிப்பும் ஒரே நேரத்தில் படிக்க விரும்புகிறேன். முடியுமா?டிசம்பர் 11,2010,00:00 IST
ஒரே நேரத்தில் நீங்கள் 2 பட்டப்படிப்புகளையோ பட்ட மேற்படிப்புகளையோ படிக்க முடியாது. குறிப்பிட்ட பல்கலைகழகங்கள் நடத்தும் இரட்டைப் பட்டப் படிப்புகளைத் தவிர இது பிற அனைத்து படிப்புகளுக்கும் பொருந்தும். பட்ட மேற்படிப்பு ஒன்றை படிக்கும் போது பட்டயப்படிப்பு ஒன்றை மட்டுமே சேர்ந்து ஒரே நேரத்தில் படிக்க முடியும்.