ஈவன்ட் மேனேஜ்மென்ட் என்னும் துறை பற்றிய தகவல்களை அறிய விரும்புகிறேன். | Kalvimalar - News

ஈவன்ட் மேனேஜ்மென்ட் என்னும் துறை பற்றிய தகவல்களை அறிய விரும்புகிறேன்.ஜனவரி 25,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

பொதுவான நிகழ்ச்சி ஒன்றை வெற்றிகரமாக நடத்திக் காட்டும் குழுவினரை அறிவோம். இது போன்ற நிகழ்ச்சி நிர்வாகிகளை ஈவன்ட் மேனேஜ்மென்ட் துறையினர் என்று கூறலாம். குறிப்பிட்ட நிகழ்ச்சி ஒன்றின் அடிப்படைகளை நன்றாக அறிந்து கொண்டு சரியான திட்டமிடலுடன் திறம்பட எந்தவித குழப்பமும் இல்லாமல் நடத்துபவர்கள் அனைவரும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு வருபவர்கள் அல்ல. எனினும் இன்றைய அவசரகதி உலகில் இதற்கென பிரத்யேகத் துறைக்கான அவசியம் இருக்கத்தான் உள்ளது.

கவர்ச்சி, பகட்டு என்று எந்த நிகழ்ச்சி என்றாலும் பெரிய அளவில் படாடோபம் தேவைப்படுகிறது. இவை அனைத்தையும் உறுதி செய்வது தான் ஈவன்ட் மேனேஜ்மென்ட் துறை. இசைக் கச்சேரிகள், கவர்ச்சி, ஸ்டைல் என தங்களுக்குத் தேவைப்படும் அனைத்து அம்சங்களையும் நிகழ்ச்சியை நடத்த விரும்புபவர்கள் ஈவன்ட் மேனேஜர்களிடம் தெரிவித்து விட்டால் அவை அனைத்தையும் தொழில்நுட்பத் திறனுடன் நடத்திக் காட்டுபவர்கள் இந்தத் துறையினர் தான்.

நிகழ்ச்சிக்கான அடிப்படைகளை ஒரு புளூபிரின்டாக வடிவமைத்துக் கொடுத்து விடுகின்றனர் இவர்கள். அடிப்படை வடிவமைப்பு, விளம்பரத் தேவைகள், போக்குவரத்து அடிப்படைகள், நிகழ்ச்சி நடத்தும் இடம், கட்டணம், விருந்தினர்கள் எண்ணிக்கை, அவர்களுக்கான உணவு போன்ற தேவைகளை எப்படி சந்திப்பது என ஒரு நிகழ்ச்சி தொடர்பான அனைத்து அம்சங்களையும் இவர்கள் தீர்மானிக்கிறார்கள். நிதி மேலாண்மை தான் இவை அனைத்தையும் விட முக்கியமானதாக அமைகிறது.

சிறப்பான தலைமை தாங்கும் குணம், பேச்சுத் திறன், பொதுத் தொடர்புத் திறன், ஒருங்கிணைக்கும் திறன், மார்க்கெட்டிங் திறன், அடிப்படை போக்குவரத்து போன்ற வசதிகள், இவற்றிலுள்ள ரிஸ்க்குகளை எதிர்கொள்ளும் திறன் என ஈவன்ட் மேனேஜர்களிடம் தேவைப்படும் திறன்கள் அதிகம்.

இத் துறையில் டிப்ளமோ படிப்பிலிருந்து முறையான படிப்புகள் துவங்குகின்றன. பிளஸ் 2 தகுதி போதும் இதற்கு. இதில் பட்டயப் படிப்பு படிக்க விரும்புபவர்களுக்கு பட்டப்படிப்பு தகுதி தேவை. விசுவலைசிங் கான்செப்ட், பிளானிங், பட்ஜெட்டிங், ஆர்கனைசிங், கோ ஆர்டினேட்டிங், எக்சிகியூடிங் என இத் துறையில் பல்வேறு பிரிவுகளில் வேலைகள் உள்ளன. மேலும் புராடக்ட் லாஞ்சிங், கார்ப்பரேட் மீட்டிங், செமினார், திருமணங்கள், பொருட்காட்சிகள் போன்றவற்றை அமைத்து நிர்வகிக்கத் திறன்கள் தேவைப்படுகின்றன.

துறையில் சான்றிதழ் படிப்புகளை நடத்தும் நிறுவனங்கள்:
Amity Institute of Event Management, New Delhi,
Institute of Tourism & Future Management Trends (ITFT), Chandigarh
The International Center for Event Marketing & Manage ment (ICEM), New Delhi

இதில் டிப்ளமோ படிப்பை நடத்தும் நிறுவனங்கள்
National Academy of Event Management & Development (NAEMD), Mumbai
College of Event & Manage ment (COEM), Pune
Event Management Develop ment Institute (EMDI), Mumbai
International Institute of Event Management (IEM), Mumbai
National Institute for Media Studies, Ahmedabad

இதில் பி.ஜி., டிப்ளமோ படிப்பை நடத்தும் நிறுவனங்கள்
Apeejay Institute of Mass Communication, New Delhi
Event Management Develop ment Institute (EMDI), Mumbai
மேனேஜ்மென்ட் என்பது கடந்த சில ஆண்டுகளாக அறியப்பட்டாலும் அதிக எதிர்கால வாய்ப்புகளைக் கொண்டது. நல்ல துறைகளில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us