எல்லா துறைகளிலுமே படைப்பாக்கத்திறன் தேவைப்படுகிறது | Kalvimalar - News

எல்லா துறைகளிலுமே படைப்பாக்கத்திறன் தேவைப்படுகிறதுஜனவரி 27,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

எம்.பி.. படிப்பு சம்பந்தமாக மாணவர்களின் சில கேள்விகளுக்கான பதில்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

கே: வெளி உலகில் எம்.பி.. மற்றும் பி.ஜி.டி.எம். ஆகிய படிப்புகள் சமமான மதிப்பினை பெற்றுள்ளனவா?

: இது நீங்கள் படிக்கவிருக்கும் கல்வி நிறுவனத்தையும், எதிர்காலத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் வேலையையும் பொறுத்தது. பி.ஜி.டி.எம். படித்த பிறகு, நீங்கள் உயர்கல்வி படிக்க நினைத்தாலோ, அரசு பணி அல்லது பொதுத்துறை அலுவலக பணிகளுக்கு முயற்சித்தாலோ, நீங்கள் படிக்கப்போகும் பி.ஜி.டி.எம்., யு.ஜி.சி/..சி.டி.. அல்லது எம்.எச்.ஆர்.டி. ஆகியவற்றின் அங்கீகாரத்தை பெற்றிருக்க வேண்டும்.

ஜாம்ஷெட்பூரிலுள்ள எக்ஸ்.எல்.ஆர்.., இந்தியன் கெசட்டால் அறிவிக்கப்பட்ட, அங்கீகாரமுடைய பி.ஜி.டி.எம். படிப்பை கொண்டுள்ளது. அதேசமயம் நீங்கள் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெற விரும்பினால், அங்கீகரிக்கப்படாத பி.ஜி.டி.எம். படிப்பே உங்களுக்கு நன்மை பயக்கும்.

கே: நான் பி.எஸ்சி. இளநிலை படிப்பில் எலெக்ட்ரானிக்ஸ் படித்து தற்போது கால் சென்டரில் பணிபுரிகிறேன். நான் இக்னோ மூலமாக எம்.பி.. படிக்க விரும்புகிறேன். பட்டப்படிப்பில் மதிப்பெண் குறைவாக இருந்து, 6 ஆண்டுகளுக்கு மேலாக பணி அனுபவம் இருக்கும்பட்சத்தில், என்னால் இக்னோவில் எம்.பி.. படிக்க முடியுமா?

: இக்னோவில் எம்.பி.. படிப்பதற்கான தகுதி விதிமுறைகள் சற்று கடுமையாக இருப்பதுடன், நன்கு வரையறை செய்யப்பட்டதாகவும் இருக்கின்றன. நீங்கள் இளநிலை படிப்புடன் 3 வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட பணி அனுபவம் வைத்திருந்தாலோ, அல்லது மேற்பார்வையாளர், மேலாளர் அல்லது ஒரு நல்ல தொழில் நிபுணர் என்ற நிலையில் இருந்தால், நீங்கள் இக்னோவில் எம்.பி.. படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

மேற்கூறிய தகுதிகளோடு நீங்கள் பட்டப்படிப்பில், பொதுப் பிரிவில் 50% மதிப்பெண்களுக்கும் மேல் பெறாமல் இருந்தால், இக்னோவால் நடத்தப்படும் ஓபன்மேட் -இல் சேரலாம். உங்களின் கேட் மற்றும் மேட் தேர்வு மதிப்பெண்களும் கருத்தில் கொள்ளப்படும். அதேசமயத்தில் தொலைநிலை எம்.பி.. படிப்புகளை தமிழ்நாடு மாநில திறந்தநிலை பல்கலைக்கழகம், கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகம் போன்றவையும் நடத்துகின்றன. அந்த படிப்புகளும் உங்களுக்கு பொருத்தமானதாகவே இருக்கும்.

கே: நான் எம்.பி.. படிக்க விரும்புகிறேன். ஆனால் வங்கி துறைகளில் பணிபுரிய எனக்கு விருப்பம் இல்லை. எதிர்வரும் குறுகிய காலத்திற்குள் நான் சொந்த தொழிலை ஆரம்பிக்க விரும்புகிறேன். எனவே எனக்கு விருப்பமுள்ள வகையில் ஏதேனும் ஒரு வேலைவாய்ப்பு துறையை பரிந்துரைக்க முடியுமா? மேலும் அந்த பணியில் படைப்பாக்கத்திற்கான வாய்ப்பு இருக்க வேண்டும்.

: தற்போது உங்களுக்கு இருக்கும் குழப்பம் நல்லது. ஏனெனில் உங்களுக்கு பொருத்தமானது எது என்று நீங்கள் அதிகம் சிந்திக்கிறீர்கள். உங்களுக்கு எந்த பாடம் பொருத்தமானதாக இருக்கும் என்று நீங்கள் சற்று கவனமாக ஆராய்ந்தால், உங்களுக்கான குழப்பம் நீங்கும். நீங்கள் எதிர்பார்க்கும் படைப்பாக்கத்திறன் ஒவ்வொரு துறைக்குமே தேவை. பொதுவாக சிறிய நிறுவனங்கள் மற்றும் புதிதாக துவக்கப்பட்ட நிறுவனங்கள், உங்களின் படைப்பாக்கத் திறனை பயன்படுத்த பல வாய்ப்புகளை வழங்குகின்றன.

அதைத்தவிர சில புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனங்களும் உங்களது படைப்பாக்க திறனை ஊக்குவிக்கும் வாய்ப்பினை அளிக்கும். அதேசமயத்தில் நீங்கள் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு புதிய விஷயத்தை முயற்சி செய்யும்போது அதில் தோல்விகள் வருவது வழக்கமான ஒன்று என்பதுதான் அது. நீங்கள் தோல்வியை தவிர்க்க விரும்பினால், நீங்கள் புதிதாக முயற்சிக்கக்கூடிய துறையை நன்கு யோசித்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us