பிளஸ் 2 படித்துக் கொண்டிருக்கிறேன். தடய அறிவியல் துறையில் படிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். இது பற்றிக் கூறலாமா? | Kalvimalar - News

பிளஸ் 2 படித்துக் கொண்டிருக்கிறேன். தடய அறிவியல் துறையில் படிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். இது பற்றிக் கூறலாமா?பிப்ரவரி 21,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

குற்றவாளிகளை அடையாளம் காணுவதில் போலீஸ் துறைக்கு மிகவும் உதவும் ஒரு உட்பிரிவு தடய அறிவியல் துறை. நீதிமன்றங்களில் முக்கியமான சாட்சியாக தடய அறிவியல் கண்டுபிடிப்புகள் தான் உதவுகின்றன. குற்றம் நடந்த இடத்தில் ரத்தம், எச்சில், வெடிபொருட்கள், உடலின் பிற திரவங்கள், முடி, கைரேகைகள், காலணிகள், ஆல்கஹால் போன்றவற்றை தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து முக்கியமான துப்புகளைத் தருகின்றனர். அறிவியல் பூர்வமான ஆதாரங்களாக இவை அமைகின்றன.

பாரன்சிக் பாத்தாலஜி, சøக்கியாட்ரி, பாரன்சிக் மெடிசின், ஓடோன்டாலஜி, பயாலஜி, டாக்சிகாலஜி, பாலிஸ்டிக்ஸ், பிங்கர் பிரிண்ட்ஸ் போன்ற பிரிவுகள் இவற்றில் உள்ளன. 30ஏ காமராஜர் சாலை, மயிலாப்பூர், சென்னை என்னும் முகவரியிலுள்ள தடயவியல் துறையிலும் அண்ணா பல்கலைக்கழகத்திலும் இத் துறையில் பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புகளைப் படிக்கலாம்.

பொதுவாக இத் துறையில் படிப்புகளை முடிப்பவர்களுக்கு போலீஸ் துறையிலும், சட்டத் துறையிலும், துப்பறியும் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. சமீபத்தில் செய்திகளில் இடம் பெற்ற புகைப் படங்களில் பெண் தடய அறிவியல் ஆய்வாளர்கள் பணியில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us