துணை ராணுவப் படையில் சேர விரும்புகிறேன். இது பற்றிய தகவல்களைக் கூற முடியுமா? | Kalvimalar - News

துணை ராணுவப் படையில் சேர விரும்புகிறேன். இது பற்றிய தகவல்களைக் கூற முடியுமா? மார்ச் 10,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

ஒரு நாட்டுக்கும் அந்நாட்டின் மக்களுக்குமான சேவை புரியும் பணியே மிக நல்ல பணி என்று கருதப்படுகிறது. இது மாதிரியான சேவை புரிய நாட்டின் பாதுகாப்புப் படை, காவல் துறை ஆகியவற்றுடன் மத்தியக் காவல் படை அல்லது துணை ராணுவப் படை, இந்திய கடலோர காவற்படையும் மிக நல்ல பணித் துறைகளாகக் கருதப்படுகிறது. ஆனால் இந்தப் பணிகளில் வாழ்க்கையே பணயம் வைக்கும் சவால்களும் உண்டு. நாடு தழுவிய அளவில் இப்பணிகள் இருப்பதால் பல்வேறுபட்ட மனிதர்கள், கலாச்சார மாண்புகள் போன்றவற்றை அறியும் வாய்ப்புகள் உள்ளன.
 
மத்தியக் காவல் படையைப் பொறுத்தவரை மத்திய ரிசர்வ் காவல் படை (சி.ஆர்.பி. எப்.,), கரையோரக் காவல் படை(பி.எஸ்.எப்.,), மத்திய நிறுவனப் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்.,), இந்தோதிபெத்திய எல்லையோரக் காவல் (ஐ.டி.பி.பி.,), தற்போது சகஸ்ட்ர சர்விஸ் பீரோ என்று வழங்கப்படும் ஸ்பெஷல் சர்விஸ் பீரோ ஆகியவை அடங்கும்.

முப்படைகளின் கூட்டாக செயல்படுவதுதான் இந்திய எல்லைக் காவல் படையின் பணியாகும். இது இந்தியக் கடற்படை மற்றும் இந்திய கஸ்டம்ஸ் அமைப்புகளுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றுகிறது. கடல், நதித் துவாரங்கள் மற்றும் சீனாவின் எல்லையில் உள்ள காஷ்மீரின் நதிகள் ஆகிய பகுதிகளை இது தீவீரமாக கண்காணிக்கின்றது. இப்பணியில் தொடர்புடைய டூட்டி அதிகாரிகளும் நேவிகேட்டர்களும் விமான தளங்கள் மற்றும் கப்பலில் பணியாற்றுகிறார்கள்.

தேர்ச்சி முறை எப்படி...
மத்திய காவல் படை:  இந்தப் பணிகளுக்கு எஸ்.எஸ்.சி.,யும் யு.பி. எஸ்.சி.,யும் நடத்தும் முறையே துணை ஆய்வாளர் மற்றும் உதவி கமாண்டன்ட் பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளை எழுதித் தேர்ச்சி அடையவேண்டும். இத் தேர்வை எழுத பட்டப் படிப்பு தகுதி தேவைப்படும். ஏதாவது ஒரு புலத்தில் பட்டம் முடித்தவர்கள் இத் தேர்வை எழுதலாம் என்ற போதும் அவர்கள் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பி.எஸ். எப்., சி.ஐ.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப்., ஐ.டி.பீ.பி., மற்றும் எஸ்.எஸ்.பீ பதவிகளுக்கு இது தேவை. மகளிர் பட்டதாரிகள் சி.ஐ.எஸ்.எப்., மற்றும் சி.ஆர்.பி.எப்., பணிகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்தப் பணிகள் எதற்கும் உடல் ஊனமுற்றோர் விண்ணப்பிக்க முடியாது.

போட்டித் தேர்வு எப்படி இருக்கும்...
போட்டித் தேர்வு இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும். முதல் பிரிவான எழுத்துத் தேர்வு 500 மதிப்பெண்களை உள்ளடக்கியது. ஒரு தனி நபரின் ஆளுமை குறித்த இரண்டாம் பிரிவு நேர்காணல் தேர்வு 100 மதிப்பெண்களை கொண்டது. முதல் பிரிவில் பொது அறிவு, ரீசனிங், நியூமரிக்கல் எபிலிட்டி எனப்படும் கணிதம், ஜெனரல் அவேர்நெஸ் எனப்படும் பொது அறிவு ஆகிய பகுதிகள் இருக்கும். இதே பிரிவில் ஆங்கில அறிவை சோதிக்கும் பகுதியும் உண்டு.இது பற்றிய முழு விபரங்கள் அறிய www.ssc.nic.in என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.

குரூப் ஏ பிரிவில் வரும் துணை கமாண்டன்ட் பணிக்கும் இதே வயது வரம்பு தேவை என்ற போதும் இரு பாலரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். யு. பி.எஸ்.சி., நடத்தும் தேர்வு எழுதி வெற்றி அடைவதன் மூலம் இப்பணிகளைப் பெற முடியும். இத் தேர்வு முறையும் கிட்டத்தட்ட எஸ்.எஸ்.சி., தேர்வு முறையை ஒத்தது. இத் தேர்வை எழுதி வெற்றி பெறுபவர்கள் பெட் எனப்படும் பெர்சநாலிட்டி தேர்விலும் வெற்றிபெற வேண்டும்.

வேலை எப்படி இருக்கும்
இப்பணிகளில் தேர்வு பெறுபவர்கள் இந்தியாவின் எப்பகுதியில் வேண்டுமானாலும் பணி நியமனம் பெற வேண்டி இருக்கும். இப்ப பணிகள் அனைத்துமே ஏற்கனவே குறிப்பிட்டபடி சவால்கள் நிறைந்ததாக இருக்கும். இப் பணிகள் அனைத்திலும் நல்ல பணி முன்னேற்றமும், நல்ல ஊதிய விகிதங்களும், பிரகாசமான எதிர்காலமும் இருக்கும் என்பது அனுபவபூர்வமான தகவலாகும். என்.சி.சி., விளையாட்டு வீரர்களுக்கு இத்துறைப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us