அனிமேஷன் துறையில் எண்ணற்ற வாய்ப்பு | Kalvimalar - News

அனிமேஷன் துறையில் எண்ணற்ற வாய்ப்பு

எழுத்தின் அளவு :

அனிமேஷன் துறையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. பொழுதுபோக்கு சார்ந்த துறை என்பதால், இதற்கு ஏற்றத்தாழ்வு இருக்காது; ஏற்றம் மட்டுமே இருக்கக்கூடிய துறை இது  என எஸ்.ஆர்.எம்., பல்கலை பேராசிரியர் உன்னிகிருஷ்ணன் பேசினார்.

அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் டிசைனிங் துறையில் பெருகி வரும் வேலைவாய்ப்பு குறித்து எஸ்.ஆர்.எம்., பல்கலை பேராசிரியர் உன்னி கிருஷ்ணன் பேசியதாவது : அனிமேஷன், கிராபிக்ஸ் துறைக்கு முக்கியமானது கிரியேட்டிவிட்டி. அதாவது, எண்ணங்களுக்கு, உருவம் தருவது; செயல்வடிவம் அளிப்பது. ஆடியோ, வீடியோ என எவ்வடிவத்திலும் இருக்கலாம்.

அனிமேஷன் என்பது 2டி, 3டி என வகைப்படுத்தலாம். 2டி அனிமேஷன் என்பது பிளாட் அனிமேஷன். இதில், இல்லஷ்ட்ரேட்டர், கோரல்ட்ரா, போட்டோஷாப், பிளாஷ், இன் டிசைன் ஆகியவை அடங்கும்; 3டியில் 3டி எஸ், மாயா அடங்கும். 3டியை பயன்படுத்தி, இன்டீரியர், வெப்டிசைன் கான்செப்ட்ஸ் ஆகியவற்றுக்கு தயாரிக்கலாம்.

ஒரு வேலை செய்வதற்கு, ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை ஊதியமாக பெறலாம். அதிக லாபத்துடன் சுயதொழில் புரியலாம்; கல்வித்துறையில், விளம்பரத்துறையில், வெப் டிசைனிங், பேஷன் டிசைனிங், இன்டீரியர் டிசைனிங் துறையில் பணியாற்றலாம். கம்ப்யூட்டர் கேமிங், மல்டி மீடியா துறையிலும் நல்ல ஊதியத்துடன் வாய்ப்புகள் உள்ளன.

விஷூவல் கம்யூனிகேஷன் படிப்பில், மல்டி மீடியா என்பது ஒரு பகுதியாக வரும். டிப்ளமோ படிப்பு பயில, ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை செலவாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. பொழுதுபோக்கு சார்ந்த துறை என்பதால், இதற்கு ஏற்றத்தாழ்வு என்பது இருக்காது; ஏற்றம் மட்டுமே இருக்கக்கூடிய துறை இது, என்றார்

 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us