எனது பெயர் முகமது. நான் 12ம் வகுப்பை முடித்திருக்கிறேன். நான் எலவேட்டர் - எஸ்கலேட்டர் இன்ஸ்டாலேஷன் அண்ட் மெயின்டனன்ஸ் டெக்னீஷியன் கோர்ஸ் படிக்க விரும்புகிறேன். ஆனால் எந்த கல்வி நிறுவனம் இப்படிப்பை வழங்குகிறது என்று தெரியவில்லை. இப்படிப்பிற்கான ஏற்பாட்டை எவ்வாறு செய்வது என்று மிகவும் குழப்பமாக உள்ளது. எனவே, சென்னையில், இப்படிப்பை வழங்கும் தரமான கல்வி நிறுவனங்கள் பற்றிய தகவல்களைத் தரவும். | Kalvimalar - News

எனது பெயர் முகமது. நான் 12ம் வகுப்பை முடித்திருக்கிறேன். நான் எலவேட்டர் - எஸ்கலேட்டர் இன்ஸ்டாலேஷன் அண்ட் மெயின்டனன்ஸ் டெக்னீஷியன் கோர்ஸ் படிக்க விரும்புகிறேன். ஆனால் எந்த கல்வி நிறுவனம் இப்படிப்பை வழங்குகிறது என்று தெரியவில்லை. இப்படிப்பிற்கான ஏற்பாட்டை எவ்வாறு செய்வது என்று மிகவும் குழப்பமாக உள்ளது. எனவே, சென்னையில், இப்படிப்பை வழங்கும் தரமான கல்வி நிறுவனங்கள் பற்றிய தகவல்களைத் தரவும்.ஜனவரி 20,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

எலக்ட்ரானிக் முறையில் கட்டுப்படுத்தப்படும் நவீன எலவேட்டர்களை நிறுவுதல், பழுதுபார்த்தல், பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள, எலவேட்டர் நிறுவுனர்கள் மற்றும் பழுதுபார்ப்பவர்கள், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிசிட்டி மற்றும் ஹைட்ராலிக்ஸ் குறித்து சிறப்பான அறிவைப் பெற்றிருக்க வேண்டும். பல எலவேட்டர்கள், மைக்ரோப்ராசஸர்கள் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. சிறப்பான முறையில் எலவேட்டர்களை நகர்த்தும் பொருட்டு, டிராபிக் நிலைமைகளை பகுப்பாய்வு செய்ய இந்த மைக்ரோப்ராசஸர்கள் ப்ரோகிராம் செய்யப்பட்டுள்ளன.

பொதுவாகவே, எலவேட்டர் நிறுவுனர்கள் மற்றும் பழுதுபார்ப்பவர்கள், நிறுவுதல், பராமரித்தல் மற்றும் பழுதுபார்த்தலில் நிபுணத்துவம் பெற்றுள்ளனர். நிறுவுனர்களைவிட, பராமரித்தல் மற்றும் பழுதுபார்க்கும் பணிகளை செய்பவர்கள், எலக்ட்ரிசிட்டி மற்றும் எலக்ட்ரானிக் பற்றி சிறப்பாக அறிந்திருக்க வேண்டும். ஏனெனில், அவர்களது பணி அத்தகைய சிக்கல் வாய்ந்தது. மேலும், அட்ஜஸ்டர் எனப்படும் ஒழுங்கு செய்பவர், எலக்ட்ரானிக், எலக்ட்ரிசிட்டி மற்றும் கணினியைப் பற்றிய தெளிவான அறிவைக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில், புதிதாக நிறுவப்பட்ட எலவேட்டர்கள் ஒழுங்காக செயல்படுகிறதா? என்பதை உறுதிசெய்தல் அவர்களது பணியாகும்.

எனவே, முதலில் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ அல்லது டிகிரி படித்துவிட்டு, ஏதேனும் எலவேட்டர் தயாரிப்பு நிறுவனத்தில் அப்ரன்டிஷிப் பயிற்சியில் சேர்ந்து, பின்னர், தொழில்முறை நிபுணராக சேரவும். ஒருவருக்கு எஸ்கலேட்டர் நிறுவுதலில் சிறப்பு பயிற்சி தருமளவுக்கு நம்மிடம் தொழில்சார்ந்த கல்வி நிறுவனங்கள் இல்லை என்பதை நினைவில் கொள்க.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us