என் பெயர் முகிலன். நான் நுண்கலை பட்டதாரி. முதுநிலையில், டிசைன் மேனேஜ்மென்ட் படிப்பை, புனேயிலுள்ள எம்.ஐ.டி. டிசைன் கல்வி நிறுவனத்தில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தப் படிப்பை முடித்தப்பிறகு, எனக்கான வாய்ப்புகள் என்னென்ன? நான் ஒரு வருடமாக, விசுவலைசராக பணிபுரிந்து வருகிறேன். | Kalvimalar - News

என் பெயர் முகிலன். நான் நுண்கலை பட்டதாரி. முதுநிலையில், டிசைன் மேனேஜ்மென்ட் படிப்பை, புனேயிலுள்ள எம்.ஐ.டி. டிசைன் கல்வி நிறுவனத்தில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தப் படிப்பை முடித்தப்பிறகு, எனக்கான வாய்ப்புகள் என்னென்ன? நான் ஒரு வருடமாக, விசுவலைசராக பணிபுரிந்து வருகிறேன்.மே 11,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

இன்னும் ஒரு வருடமோ அல்லது சில வருடங்களோ பணி அனுபவம் பெற்றபிறகு, தேசிய டிசைன் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து, Strategic design management என்ற பெயரில் முதுநிலை டிப்ளமோ படிப்பை மேற்கொள்ளலாம். இது ஒரு சிறந்த உபாயமாக இருக்கும். உங்களின் எதிர்கால தொழில் திட்டங்களுக்கு, இந்தப் படிப்பு எந்தளவில் உதவியாக இருக்கும் என்பதை ஆராய்ந்து திட்டமிட, www.nid.edu என்ற இணையதளம் செல்க.

இந்தத் தொழில் உலகளாவிய அளவில் வளர்ந்து வருகிறது. டிசைன் மற்றும் அதன் தொடர்பான தொழில்களுக்கான(விளம்பரம், மீடியா மற்றும் இதர தகவல்தொடர்பு மற்றும் படைப்பாக்கம் சார்ந்த பணிகள் போன்றவை) ஆட்கள் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us