தேசிய மூளை ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிற்சிபெற ஆசையா? | Kalvimalar - News

தேசிய மூளை ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிற்சிபெற ஆசையா?ஜூலை 12,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

தேசிய மூளை ஆராய்ச்சி நிறுவனம், ஹரியானா மாநிலம், குர்கானில் அமைந்துள்ளது. உலகின் மிகச் சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக இது திகழ்கிறது. இந்தியாவில், இத்துறைக்கான சிறந்த ஆய்வாளர்களை உருவாக்கி, உலகளவில், இத்துறை ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கும் வகையில், இந்தியாவை தயார்படுத்துவதே இந்நிறுவனத்தின் பிரதான நோக்கம்.

இம்மையத்தை தொடங்குவதற்கான முதல் அறிவிப்பு, கடந்த 1997ம் ஆண்டு வெளிவந்தது. பின்னர், 1999ம் ஆண்டு, தன்னாட்சி அமைப்பாக, இம்மையம் பதிவு செய்யப்பட்டது.

ஆராய்ச்சி நடவடிக்கைகள்

Neuroinfection and inflammation

Signal Transduction and Gene Regulation in Glioma

Language and speech processing in bilinguals

Retinal circuitry - in health and in disease

Neurological disorders involving protein misfolding

Synaptic plasticity and Memory in hippocampus

CNS stem cells as models of alzheimer and prion disease

Epigenetic control of neuronal wiring and plasticity

உள்ளிட்ட பலவிதமான தலைப்புகளில், பல ஆய்வாளர்கள், தங்களின் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்கள்.

இங்குள்ள வசதிகள்

மத்திய அரசின் பயோடெக்னாலஜி துறையால் வழங்கப்பட்ட, தேசிய நியூரோஇமேஜிங் வசதி, கடந்த 2006ம் ஆண்டு முதல், பயன்பாட்டில் உள்ளது. இந்த வசதியானது, கீழே கொடுக்கப்பட்டுள்ள அம்சங்களுடன் உள்ளது,

Magnetic Resonance imaging(MRI) Scanner
Electroencephalography(EEG)
Evoked Response Potential Recording(ERP)

விலங்கு ஆராய்ச்சி வசதி

மூளை ஆராய்ச்சியில், பல்வேறு விலங்குகளைப் பயன்படுத்தி, சிறப்பாக ஆராய்ச்சி மேற்கொள்ளும் விதமாக, மேம்பட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஆராய்ச்சிக்கு, மேம்பட்ட கணினி வசதி அவசியம். இதை நிறைவுசெய்யும் விதமாக, பல்வேறான அம்சங்களைக் கொண்ட, கணினி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நூலகம்

நவீன எலக்ட்ரானிக் சாதனங்கள், பலவிதமான ஜர்னல்கள், தரவுகள், திட்ட அறிக்கைகள் மற்றும் ஏராளமான புத்தகங்கள் ஆகிவற்றுடன், பிரமாண்டமான நூலக வசதி, இந்த ஆராய்ச்சி மையத்தில் உள்ளது.

இம்மையத்தில் வழங்கப்படும் பாடத்திட்டங்கள்

தேசிய மூளை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு, கடந்த 2002ம் ஆண்டில், நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டது. பயோடெக்னாலஜி துறை தொடர்பான நிறுவனங்களிலேயே, இந்த அந்தஸ்தைப் பெற்ற முதல் நிறுவனம் இதுவேயாகும்.

வழங்கப்படும் பாடத்திட்டங்கள்

நியூரோசயின்ஸ் பிரிவில் பிஎச்.டி

நியூரோசயின்ஸ் பிரிவில் ஒருங்கிணைந்த(INTEGRATED) பிஎச்.டி

கோடைகாலப் பயிற்சி மற்றும் குறுகியகால படிப்புகள்

பெங்களூரிலுள்ள இந்தியன் அகடமி ஆப் சயின்ஸ், டெல்லியிலுள்ள இந்தியன் நேஷனல் சயின்ஸ் அகடமி மற்றும் அலகாபாத்திலுள்ள நேஷனல் அகடமி ஆப் சயின்சஸ் ஆகிய நிறுவனங்களின் மூலமாக, கோடைகாலப் பயிற்சி மற்றும் குறுகியகால படிப்பு திட்டங்களை, NBRC நடத்துகிறது.

கோடைகால பயிற்சி என்பது 8 வார காலஅளவைக் கொண்டது. இந்த காலத்தில், NBRC விடுதியிலேயே தங்குமிட வசதி செய்யப்படும். NBRC -ஆல் நடத்தப்படும் செமினார்கள் மற்றும் ஜர்னல் கிளப்புகளில் கலந்துகொள்ள ஊக்கமளிக்கப்படும்.

Post Doctoral Fellowship

பிஎச்.டி பட்டம் பெற்றவர்கள், நியூரோசயின்ஸ் துறையில் பொதுவான பிரிவுகளின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தால், அவர்களுக்கான Post Doctoral படிப்பும் வழங்கப்படுகிறது.


இந்த தேசிய மூளை ஆராய்ச்சி மையம் குறித்த அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ள http://www.nbrc.ac.in/index.php என்ற இணையத்தளம் செல்லவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us