எதிர்கால இந்தியாவின் பெரிய தொழில்கள்: ஜெயப்பிரகாஷ் காந்தி | Kalvimalar - News

எதிர்கால இந்தியாவின் பெரிய தொழில்கள்: ஜெயப்பிரகாஷ் காந்தி

எழுத்தின் அளவு :

இன்றைய நிலையில், இந்தியாவானது, உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரமாக திகழ்கிறது என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. வரும் 2020ம் ஆண்டில், உலகளவில் ஒரு முக்கிய சக்தியாக மாறி, பல நிலைகளில் முக்கியப் பங்காற்றும் நாடாக இந்தியா விளங்கும் என்றும் கணிக்கப்படுகிறது. அதன்படி பார்த்தால், எதிர்காலத்தில் இந்நாட்டில், அதிகளவிலான வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது, அடிக்கடி, சில குறிப்பிட்ட துறைகளின் வளர்ச்சியை வைத்தே மதிப்பிடப்படுகிறது. ஏனெனில், இந்த சில குறிப்பிட்ட துறைகள், பிற துறைகளைவிட வேகமாக வளர்ச்சியடையும். எனவே, எதிர்காலத்தில் கிடைக்கவிருக்கும் அபரிமிதமான வேலை வாய்ப்புகள், அந்த சில குறிப்பிட்ட துறைகளை சார்ந்ததாகவே இருக்கும்.

வரும் 2020ம் ஆண்டு முதல், இந்தியாவானது, உலகப் பொருளாதாரத்தை வழிநடத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. தகவல் தொழில்நுட்பம், விவசாயம், டெக்ஸ்டைல்ஸ் மற்றும் உள்கட்டமைப்பு போன்றவை இன்றைய அளவிலும் பெரிய துறைகளாக உள்ளன. அதேசமயம், இந்த துறைகள் அடுத்த பத்தாண்டுகளில் பெரிய மாறுதல்களை சந்தித்து, தனக்குள் மிகப் பெரியளவிலான வேலை வாய்ப்புகளைக் கொண்டிருக்கும்.

மேற்கூறிய அந்த துறைகளுடன் சேர்ந்து, மருத்துவ பராமரிப்பு, அனிமேஷன் அன்ட் கேமிங், சரக்கு ஏற்றுமதி-இறக்குமதி, சில்லறை வணிகம் போன்றவையும் பெரிய வளர்ச்சியடையும். இந்த துறைகளின் வளர்ச்சியானது, தற்போது நம் நாட்டில் ஆரம்ப நிலையில் இருந்தாலும், 2020ம் ஆண்டு வாக்கில் நிலைமை பெரியளவில் மாறியிருக்கும்.

நாம் அனைவரும் எதிர்பார்க்கும் அந்த 2020ம் ஆண்டுகளில், அதிகளவிலான வேலைவாய்ப்புகளைத் தரவிருக்கும் துறைகளின் விவரங்களைப் பார்க்கலாம்.

1. தகவல்தொழில்நுட்பம் மற்றும் அதுசார்ந்த துறைகள் - CLOUD COMPUTING மற்றும் நெட்வொர்க் SECURITY

2. உள்கட்டமைப்பு - GEO TECHNICAL , STRUCTURAL , OCEAN ENGINEERING , REMOTE
SENSING , WATER RESOURCE MANAGEMENT AND INTELLIGENT STRUCTURE FOR TRANSPORT
SYSTEMS ஆகியவற்றின் சிறப்பாக்க படிப்புடன் சிவில் இன்ஜினியரிங்.

3. ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் துறை - நீயூக்ளியர் பொறியியல், ஆற்றல் பொறியியல், சோலார் மற்றும் காற்றாலை பொறியியல், உயர் மின்னழுத்த பொறியியல் மற்றும் பசுமை பொறியியல்.

4. அனிமேஷன் அன்ட் கேமிங் - விளையாட்டு கட்டமைப்பு மற்றும் வடிவமைப்பு, செயற்கை மதிநுட்பம்(ARTIFICIAL INTELLIGENCE), மேம்பட்ட 3D மாடல்கள்.

5. பேஷன் அன்ட் டெக்ஸ்டைல்ஸ் - பேஷன் மேலாண்மை படிப்புகள், வணிகமயமாக்கல்

6. பார்மசூடிகல் - ஸ்டெம் செல் மற்றும் ONCOLOGY

7. மருத்துவ பராமரிப்பு - மருத்துவ பராமரிப்பு மேலாண்மை, பொது மருத்துவ மேலாண்மை, மருத்துவமனை மற்றும் மருத்துவ பராமரிப்பு மேலாண்மை

8. பயணம் மற்றும் சுற்றுலா

9. காப்பீடு - மீன்வளர்ப்பு அறிவியல்

10. சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் வழங்குதல் தொடர் மேலாண்மை

11. சில்லறை வணிகம்

12. வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்தல்

13. மீடியா மற்றும் பொழுதுபோக்கு - விளம்பரம், நிகழ்ச்சிகள் மேலாண்மை, கன்டென்ட்(CONTENT) மேம்பாடு

மாணவர் சமுதாயம், தற்போதுவரை, ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்ட அடிப்படையிலேயே ஒரு தொழிலை தேர்ந்தெடுக்கிறது. ஆனால், ஒரு தொழிலின் எதிர்காலத்தைப் பற்றி ஆராய்ந்து, யோசித்து அதை தேர்ந்தெடுப்பதே புத்திசாலித்தனம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us