ஆரோக்கியம் மற்றும் பொது சுகாதாரத்திற்கான இந்திய கல்வி நிறுவனம் | Kalvimalar - News

ஆரோக்கியம் மற்றும் பொது சுகாதாரத்திற்கான இந்திய கல்வி நிறுவனம்டிசம்பர் 21,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

ஆரோக்கியம் மற்றும் பொது சுகாதாரத்திற்கான அகில இந்திய கல்வி நிறுவனம், 1932ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்த துறையில், இதுதான் இந்தியாவின் முதல் நிறுவனம். பொது சுகாதாரம் மற்றும் பொது அறிவியல் ஆகியவை தொடர்பான பல்வேறு துறைகளில், படிப்புகளை வழங்குதல் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் முன்னோடி நிறுவனமாக இது திகழ்கிறது. இந்நிறுவனத்தின், இத்தனையாண்டு கால அனுபவத்தில், இந்தியா மட்டுமின்றி, தெற்காசிய பிராந்தியம் முழுவதிலும், பல சிறப்பான பணிகளை மேற்கொண்டுள்ளது இந்நிறுவனம்.

உள்கட்டமைப்பு வசதி

இந்நிறுவனத்தின் முக்கிய வளாகம், கொல்கத்தா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து இது 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நிர்வாகம், கல்வித் துறைகள், விரிவுரையாற்றும் அறைகள் மற்றும் ஆய்வகங்கள் போன்றவை தனித்தனியே அமைந்துள்ளன. விடுதிகளும், அருகிலேயே அமைந்துள்ளன.

நூலக வசதி

மருத்துவ அறிவியல் துறையில் அமைந்துள்ள மிகச்சில (0 நூலகங்களில், இந்நிறுவன நூலகமும் ஒன்று. 24000 அறிக்கைகள், 24000 ஜர்னல்கள், 400 எலக்ட்ரானிக் ஜர்னல்கள் போன்றவை, இந்நூலகத்தின் பிரமாண்டத்திற்கு சில எடுத்துக்காட்டுகள். இந்நூலகத்தை, மேலும் பிரமாண்டப்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

வழங்கப்படும் படிப்புகள்

இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில், MCI அங்கீகாரம் பெற்ற பலவிதமான படிப்புகள் வழங்கப்படுகின்றன. எம்.எஸ்சி, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் என்ற பல நிலைகளில் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவை பற்றி விரிவாக அறிந்துகொள்ள http://www.aiihph.gov.in/courses/view/NONMCI என்ற வலைத்தளம் செல்க.

இங்கிருக்கும் துறைகள்

Bio - Chemistry and Nutrition
Epidemiology
Health education
Maternal and Child health
Microbiology
Occupational health
Public health administration
Public health Nursing
Environmental sanitation and sanitary engineering
Preventive and social medicine
Statistics

போன்ற பலவிதமான துறைகள் உள்ளன. இங்கே, சிறப்பான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், இந்த ஆராய்ச்சி நிறுவனத்தைப் பற்றி பலவிதமான தகவல்களை அறிந்துகொள்ள http://www.aiihph.gov.in/ என்ற இணையதளம் செல்க.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us