பகுப்பாய்வு வேதியியல், புத்தாக்க ஆற்றல் படிப்புகள் பற்றி ஜெ.பி.காந்தி | Kalvimalar - News

பகுப்பாய்வு வேதியியல், புத்தாக்க ஆற்றல் படிப்புகள் பற்றி ஜெ.பி.காந்தி

எழுத்தின் அளவு :

மாணவர்களின் பலவிதமான கேள்விகளுக்கு பிரபல கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தியின் விரிவான பதில்கள் இந்த தொகுப்பில் அடங்கியுள்ளன.

கேள்வி: எனது பெயர் சிவா. கடந்த 1995ம் ஆண்டு டிப்ளமோவில் சிவில் இன்ஜினியரிங் முடித்த நான், ஒரு கட்டடக்கலை நிபுணரிடம் 10 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்த அனுபவம் பெற்றவன். தற்போது, கட்டிடக்கலையில்(Architecture) பட்டப்படிப்பு படிக்க விரும்புகிறேன். எனவே, அதற்கான சாத்தியக்கூறுகளை எனக்கு கூறுங்கள்.

பதில்: B.Arch பட்டப் படிப்பில் சேர்வதற்கு, கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்டு ப்ளஸ்2 முடித்திருப்பதோடு, National Aptitude Test for Architecture - NATA தேர்வு எழுதியும் தேறியிருக்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை, Architecture படிப்பில், இரண்டாவது வருடத்திலிருந்து(Lateral entry) சேரும் வசதி கிடையாது. பிரிட்டனில் சில பல்கலைக்கழகங்கள், டிப்ளமோ படித்தவர்களை தமது Architecture படிப்பில் சேர்த்துக்கொள்கின்றன. உங்களுக்கு பிரிட்டன் செல்லும் வாய்ப்பு இருந்தால், இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மற்றபடி பார்த்தால், பி.இ. சிவில் இன்ஜினியரிங் படிப்பில் Lateral entry முறையில் சேர்க்கைப் பெற்று, அதை முடித்தப்பிறகு, முதுநிலையில், நகர திட்டமிடுதல்(Urban planning) உள்ளிட்ட Architecture தொடர்பான படிப்பை தேர்வு செய்யலாம். அதேசமயம், இந்த முறையில் லட்சியத்தை அடைய, நீங்கள் அதிககாலம் காத்திருக்க வேண்டும்.


கேள்வி: என் பெயர் சோபனா போஸ். எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. கெமிக்கல் இன்ஜினியரிங் துறையில் பி.டெக். முடித்தப்பிறகு, எந்தவிதமான படிப்புகளை மேற்கொள்ளலாம். இந்தியாவில், அதற்கென இருக்கும் பொருத்தமான கல்லூரிகளைப் பற்றி கூறவும். மேலும், Perfume தொழில்நுட்பம் தொடர்பாக என்னால் எம்.டெக். படிக்க முடியுமா? Perfume தொழில்நுட்பத்தில் பிஎச்.டி. மேற்கொள்ள ஏதேனும் படிப்புகள் உள்ளனவா? அப்படியிருந்தால், அவற்றை மேற்கொள்வதற்கான கல்லூரிகள் பட்டியலை எனக்கு கூறவும்.

பதில்: நீங்கள் கேட்ட துறையில் எம்.டெக். மேற்கொள்ள chemical reaction engineering , chemical plant design , coal chemicals and fertilizers , fluid dynamics , petroleum exploration & production , polymer science and engineering , process dynamics and controls , technology of vegetable oils , fats and detergents போன்ற பலவித பாடங்கள் உள்ளன. அதேசமயம், நீங்கள் மேற்கொள்ளும் எம்.டெக். படிப்பை, Modern methods of chemical analysis, Membrane separation process, Design, Simulation and optimization, Kinetics and catalysis, Safety and hazard engineering, Fluid mechanics, Two phase flow, Colloid and surface science and Industrial pollution abatement போன்ற பிரிவுகளில் சிறப்பு(Specialisation) படிப்புகளாக மேற்கொள்ளலாம்.

மேற்கூறிய அனைத்துப் படிப்புகளும், IIT, NIT, Anna University போன்ற முக்கிய கல்வி நிறுவனங்களிலும், இந்தியாவின் புகழ்பெற்ற பல பொறியியல் கல்லூரிகளிலும் உள்ளன. மேற்கூறிய கல்வி நிறுவனங்களில் இடம்பெற, ஐ.ஐ.டி. நடத்தும் GATE தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும்.

Institute Of Chemical Technology என்ற கல்வி நிறுவனத்தில், Perfumes and flavors என்ற பிரிவில் நீங்கள் எம்.டெக். படிக்கலாம். அந்தக் கல்வி நிறுவனம், மும்பை பல்கலையின் கீழ் வருகிறது. இது ஒரு Interdisciplinary படிப்பாகும்.

அமெரிக்காவிலுள்ள Massachusetts பல்கலைக்கழகத்தில் Perfume தொழில்நுட்பத்தில் பிஎச்.டி. படிப்பை மேற்கொள்ளலாம்.


கேள்வி: என் பெயர் பிரதீபா; இளநிலை வேதியியல் இறுதியாண்டு படிக்கிறேன். இதன்பிறகு, நான் Analytical Chemistry படிக்க விரும்புகிறேன். எனவே, இந்தப் படிப்பை தமிழகத்தில் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறை தெரிவிக்கவும். எந்தெந்த கல்லூரிகள் இந்தப் படிப்பை வழங்குகின்றன மற்றும் அதில் சேர்வதற்கான தகுதிகள் என்னென்ன?

பதில்: வேதியியல் என்பது ஒரு அம்சத்தின் கட்டமைப்பு மற்றும் அதன் உள்ளடக்கம் பற்றிய தகவலை தெரிவிப்பது, செயல்படுத்துவது மற்றும் பெறுவது ஆகியவற்றின் அறிவியல் செயல்பாடேயாகும். மேலும், ஒரு அம்சம் எப்படியானது மற்றும் அதன் இருப்பு ஆகியவற்றை நிர்ணயிக்கும் கலை மற்றும் அறிவியல் செயல்பாடு வேதியியல் ஆகும்.

ஒரு வேதியியல் பகுப்பாய்வாளர் என்பவர், தரமான மற்றும் பல அம்சங்களை உள்ளடக்கிய ஆய்வை மேற்கொள்கிறார். இந்த செயல்பாட்டில் அவர், மாதிரியெடுத்தல், நிர்ணயித்தல், தனிப்படுத்தல், கவனித்தல், மாதிரிகளை பாதுகாத்தல், பிழை வரம்பை நிர்ணயித்தல், நுட்பம் மற்றும் தரப்படுத்தல் மூலமாக முடிவுகளை மதிப்பிடுவது மற்றும் உறுதிசெய்வது, வேறுபட்ட வேதிப் பண்புகளின் மூலமாக பொருட்களைப் பிரித்தல், அளவிடுவதற்கு புதிய வழிகளை உருவாக்குதல், பொருத்தமான சூழலில் தரவை விளக்குதல் மற்றும் தகவல்களை பரிமாறுதல் போன்ற பலவிதமான பணிகளை மேற்கொள்கிறார்.

வேதியியல் துறையின் அனைத்துப் பிரிவுகளிலுமுள்ள சிக்கல்களைத் தீர்க்க, அந்த பகுப்பாய்வாளர்கள், அவர்களின், வேதியியல் அறிவு, உபகரண அறிவு, கணினி அறிவு மற்றும் புள்ளியியல் அறிவு போன்ற பல அம்சங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

பகுப்பாய்வு வேதியியல்(Analytical Chemistry) தமிழகத்தில், கீழ்வரும் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படுகின்றன,

சென்னைப் பல்கலைக்கழகம், சென்னையிலுள்ள வேல்ஸ் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் நாமக்கல் மாவட்டத்திலுள்ள(அட்டயம்பட்டி) மகேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றில் வழங்கப்படுகின்றன.


கேள்வி: என் பெயர் ஆர்த்தி. மருத்துவ பொது நுழைவுத்தேர்வானது, 2012, மே 13ம் தேதி நடைபெறவுள்ளது என்றும், அதற்கான பாடத்திட்டத்தை MCI வழங்கியுள்ளது என்றும் நான் கேள்விப்பட்டேன். நான் மெட்ரிக் பிரிவில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி. ஆனால், MCI தயாரித்துள்ள பாடத்திட்டம், நமது பாடத்திட்டத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. தமிழகத்தில், 2012ம் ஆண்டு இந்த பொது மருத்துவ நுழைவுத்தேர்வு நடைபெறுமா? அப்படி நடந்தால், அதற்கு எவ்வாறு தயாராவது?

பதில்: திட்டமிடப்பட்டுள்ள பொது நுழைவுத்தேர்வு NEET-UG, 2013ம் ஆண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனவே, அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. வரும் 2012ம் ஆண்டில், MBBS படிப்பிற்கு, இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும். எனவே, அதில் கவனம் செலுத்துங்கள்.


கேள்வி: NEET-UG தமிழகத்தில் நடத்தப்படுமா?

பதில்: NEET-UG தேர்வு 2013ம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேறு சில மாநிலங்களோடு சேர்ந்து, அந்த மருத்துவ பொது நுழைவுத்தேர்வை கடுமையாக எதிர்க்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. அடுத்த 2013ம் ஆண்டில்தான் அந்தத் தேர்வின் நடைமுறையாக்கம் மற்றும் தன்மை குறித்து முழுவதும் தெரியவரும். 2012ம் ஆண்டைப் பொறுத்தவரை, மதிப்பெண்கள் அடிப்படையில்தான் சேர்க்கை நடைபெறும்.


கேள்வி: எனது பெயர் ஸ்ரீ அங்கப்பிரதட்சணன். நான் புதுச்சேரியை சேர்ந்தவன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இளநிலைப் பட்டம் பெற்றுள்ளேன். எனது எம்.டெக். படிப்பில், சூரிய சக்தியுடன் சேர்ந்த புதுப்பிக்கத்தக்க சக்திப் பற்றிய சிறப்புப் படிப்பை மேற்கொள்ளவுள்ளேன். எனவே, அந்தப் படிப்பு பற்றிய ஆலோசனையையும், இந்தியாவில் அந்தப் படிப்பை வழங்கும் நிறுவனங்கள் பற்றியும் கூறவும்.

பதில்: சூரிய ஒளி, காற்று, மழை, கடல்அலை மற்றும் நிலத்தடிப் பாறையின் வெப்பம் போன்றவை புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் எனப்படுகின்றன. இந்த இயற்கை முறையிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாகவே, உலகின் 16% ஆற்றல் தேவை நிறைவுசெய்யப்படுகிறது. 10% மரபுரீதியான உயிரினத் திரள்(Biomass) மூலமாகப் பெறப்படுகிறது. இந்த முறையிலான ஆற்றல், முக்கியமாக, சூடாக்குதல் செயல்முறைக்கு பயன்படுத்தப்படுகிறது. 3.4% நீர் மின்சாரம் மூலமாகப் பெறப்படுகிறது.

புதிய புத்தாக்க முறையிலான ஆற்றல்(சிறிய நீர்மின்சக்தி, நவீன உயிர்திரள், காற்று, சூரியன், நிலத்தடிப் பாறை மற்றும் நிலத்தடி எரிபொருட்கள்) மூலமாக 3% கிடைக்கிறது. அதேசமயத்தில இந்தத் துறையும் வேகமாக வளர்ந்து வருகிறது. மின்சார உற்பத்தியில் புத்தாக்கத்தின் பங்கு சுமார் 19%. அதில், 16% உலக மின்சக்தி, நீர்மின்சக்தி மூலமும், 3% புதிய புத்தாக்க முறையின் மூலமும் கிடைக்கிறது. மேற்கூறிய இந்த அம்சங்களைப் பார்க்கையில், புத்தாக்க ஆற்றல் துறையில் ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதை உணரலாம்.

காற்று, நீரடி, உயிரினத் திரள் மற்றும் சூரிய தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் காரணமாக, ஆற்றல் அமைப்பில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்களைப் பற்றி மாணவர்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் என்பதை, புத்தாக்க ஆற்றல் துறையின் முதுநிலைப் படிப்பு நோக்கமாக கொண்டுள்ளது. புத்தாக்க ஆற்றல்களை பெறுதல், மாற்றுதல், சேகரித்தல் மற்றும் நிர்வகித்தல் போன்ற செயல்பாடுகளில் ஏற்படும் சவால்களை சமாளிக்கும் திறன்களையும் இந்தப் படிப்பு வழங்குகிறது.

மேலும், இத்துறை தொடர்பான கருத்தாக்கங்கள், பயன்பாடுகள், வடிவமைப்பு, புத்தாக்க ஆற்றல் மாற்றிகளின் மேம்பாடு மற்றும் கையாள்தல், ஆற்றல் சேகரிப்பு மற்றும் தேவை மேலாண்மை அமைப்புகள் ஆகியவை தொடர்பான விஷயங்களைக் கற்பிக்கிறது. மேலும், மாணவர்களுக்கு, கீழ்கண்ட திறன்களை இந்த முதுநிலைப் படிப்பானது வழங்குகிறது;

* இத்துறை தொடர்பான, தனிச்சிறப்பு வாய்ந்த கொள்கை மற்றும் சிறப்பு ஆற்றல், தொழில்நுட்பம் மற்றும் பயிற்சிகள் ஆகியவற்றை மேம்படுத்தல்.

நீங்கள் விரும்பும் படிப்பை, கேட் தேர்வில் உயர்ந்தபட்ச மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்று, ஐஐடி மற்றும் என்ஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us