எனது பெயர் ஞானபண்டிதன். ஜிஆர்இ தேர்வுக்கு ஒருவர் தயாராக எவ்வளவு நாட்கள் தேவைப்படும் மற்றும் எந்த மாதிரியான புத்தகங்களைப் படிக்க வேண்டும்? | Kalvimalar - News

எனது பெயர் ஞானபண்டிதன். ஜிஆர்இ தேர்வுக்கு ஒருவர் தயாராக எவ்வளவு நாட்கள் தேவைப்படும் மற்றும் எந்த மாதிரியான புத்தகங்களைப் படிக்க வேண்டும்?டிசம்பர் 13,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

அந்தந்த நபர்களைப் பொறுத்து, தேர்வுக்கு தயாராகும் காலஅளவு வேறுபடும். ஜிஆர்இ ப்ரோகிராம், தேர்வுக்கு, மாணவர்கள் எளிதாகவும், சிறப்பாகவும் தயாராகும் விதமாக, பல இலவச மற்றும் குறைந்தவிலையிலான தயாரிப்பு உபகரணங்களை வழங்குகிறது. POWERPREP II software போன்ற இலவச தயாரிப்பு உபகரணங்கள், நிஜ தேர்வுக்கான ஒரு அனுபவத்தை மாணவர்களுக்கு வழங்குகின்றன.

சமீபத்தில் வெளியிடப்பட்ட, மென்பொருளின் 2.0 என்ற வெர்ஷன், 2 முழுநீள பயிற்சி தேர்வுகள், வியூகங்கள், மாதிரி கேள்விகள் மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளது. மேலும், இலவச கணித மதிப்பாய்வு அம்சமும் வழங்கப்படுகின்றன.

The Official Guide to the GRE revised General Test என்ற புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு, www.Flipkart.com என்ற இணையதளத்தில் கிடைப்பதோடு, இந்தியா முழுவதும் பல புத்தக கடைகளிலும் கிடைக்கிறது. இந்த புத்தகம், மிகவும் பயனுள்ள ஒன்றாகும். தேர்வுக்காக தயாராதல் உபகரணங்கள் குறித்து அறிந்துகொள்ள, www.TakeTheGRE.com/prep என்ற இணையதளம் சென்று, விரிவான தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us