எனது பெயர் கண்ணப்பன். நான் கடந்த 2010ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறேன். நான் இந்த சூழலில் எம்பிஏ சேர்ந்து படிக்கலாமா அல்லது பணியிலேயே தொடரலாமா? ஏனெனில், பிரிட்டனில் எம்.எஸ் படித்த என் நண்பர்களில் சிலர், வேலை கிடைக்காமல் இந்தியாவில் தேடிக் கொண்டுள்ளனர். நான் படிப்பதற்கு எந்த கல்லூரி சிறந்தது? எந்த நாட்டை நான் படிப்பதற்கு தேர்ந்தெடுக்கலாம்? எங்கு, குறைந்த கட்டணம் மற்றும் அதிக வேலைவாய்ப்புகளுக்கான சாத்தியங்கள் உள்ளன? | Kalvimalar - News

எனது பெயர் கண்ணப்பன். நான் கடந்த 2010ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறேன். நான் இந்த சூழலில் எம்பிஏ சேர்ந்து படிக்கலாமா அல்லது பணியிலேயே தொடரலாமா? ஏனெனில், பிரிட்டனில் எம்.எஸ் படித்த என் நண்பர்களில் சிலர், வேலை கிடைக்காமல் இந்தியாவில் தேடிக் கொண்டுள்ளனர். நான் படிப்பதற்கு எந்த கல்லூரி சிறந்தது? எந்த நாட்டை நான் படிப்பதற்கு தேர்ந்தெடுக்கலாம்? எங்கு, குறைந்த கட்டணம் மற்றும் அதிக வேலைவாய்ப்புகளுக்கான சாத்தியங்கள் உள்ளன?ஜனவரி 19,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

ஐரோப்பிய நாடுகளில் வழங்கப்படும் ஒரு வருட எம்பிஏ படிப்பானது, அமெரிக்க பல்கலைகளில் வழங்கப்படும் 2 வருட எம்பிஏ படிப்புகளைவிட செலவு குறைவானது. அதேசமயம், நீங்கள் துறை மாற விரும்பினால், அதாவது, தொழில்நுட்ப பிரிவிலிருந்து நிர்வாகப் பிரிவுக்கு மாற விரும்பினால், அமெரிக்காவில் வழங்கப்படும் 2 வருட எம்பிஏ படிப்புகள் சிறந்த நன்மை பயக்கும்.

முதலில், உங்களின் முதுநிலைப் படிப்பை பற்றி ஒரு தெளிவான முடிவை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். உங்களின் நிதிநிலை என்ன என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஜிமேட் தேர்வுக்கு தயாராகுங்கள். மேலும், நீங்கள், ஐரோப்பா மற்றும் அமெரிக்க கல்வி நிறுவனங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். உங்களின் கல்வி சாதனைகள் மற்றும் பணி அனுபவம் போன்றவை, உங்களுக்கான சிறந்த வாய்ப்புகளை உறுதிசெய்ய இயலும்.

நீங்கள், ஐடி மற்றும் நெட்வொர்க் துறைகளில் பணிபுரிய விரும்பினால், நீங்கள் எம்.எஸ்., ஐ.டி படிக்க வேண்டும். எம்பிஏ அல்ல. அமெரிக்காவில் எம்.எஸ் படிக்க சராசரியாக ரூ.35 லட்சம் செலவாகிறது. அதேசமயம், எம்பிஏ படிப்புக்கு ரூ.50 லட்சத்திற்கும் மேல் செலவாகிறது. எனவே, நீங்கள் மிகச்சிறந்த profile பெற்றிருந்து, அது உங்களுக்கான சிறந்த உதவித்தொகை திட்டங்களைப் பெற்று தந்தால், உங்களின் கனவு நனவாகும். இல்லையேல், பொருளாதார ரீதியாக, நிறைய சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us