என் பெயர் மதிமலர். டிசைன் இன்ஜினியரிங் துறையில் எம்.டெக்., முடித்தப்பிறகு, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். ஆனால், சொந்தமாக தொழில் தொடங்க வேண்டுமென ஆர்வமாக உள்ளது. அதை எப்படி சாதிக்கலாம்? | Kalvimalar - News

என் பெயர் மதிமலர். டிசைன் இன்ஜினியரிங் துறையில் எம்.டெக்., முடித்தப்பிறகு, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். ஆனால், சொந்தமாக தொழில் தொடங்க வேண்டுமென ஆர்வமாக உள்ளது. அதை எப்படி சாதிக்கலாம்?ஏப்ரல் 23,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

ஒரு தேவையை நிறைவுசெய்யும் கருத்தாக்கத்தின் அடிப்படையிலேயே, ஒவ்வொரு வணிகமும் தோன்றுகின்றன. எனவே, உங்களுக்கு விருப்பமான துறையை முடிவுசெய்து, அத்துறையில் தற்போதைய தேவை என்ன மற்றும் இப்போதைக்கு அத்துறையிலுள்ள தயாரிப்பு பொருட்கள் உள்ளிட்ட பல அம்சங்களை ஆய்வு செய்ய வேண்டும். மேலும், அவசியமான, அதேசமயம், நிகழ்காலத்தில், கிடைக்காமல் இருக்கும் விஷயத்தைப் பற்றியும் ஆராய வேண்டும்.

குறைந்தபட்சம், 10-12 தயாரிப்புகளுக்கான ஐடியாக்களை உருவாக்கி, எது சாத்தியமானது என்பதை முடிவுசெய்யவும். வணிக திட்டமிடல் போட்டியில் கலந்துகொள்ளவும். உங்களின் ஒத்த சிந்தனை உடையவர்களிடத்தில் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு, குழுவாக இணையவும். டி.ஐ.இ., மற்றும் என்.இ.என்., போன்ற அமைப்புகளுடன், ஒப்பந்தம் செய்து கொள்ளவும்.

ஒரு சொந்த வியாபாரத்தை தொடங்குதல் என்பது, காலம் மற்றும் பணம் செலவழித்தல், கடுமையான முயற்சி மற்றும் சவாலை எதிர்கொள்ளல் போன்றவைகளை கொண்டது. எனவே, நன்றாக ஆராய்ந்து செயலில் இறங்கவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us