‘ஒழுக்கத்துடன் கூடிய தரமான கல்வி அவசியம்’ | Kalvimalar - News

‘ஒழுக்கத்துடன் கூடிய தரமான கல்வி அவசியம்’

எழுத்தின் அளவு :

தனலட்சுமி சீனிவாசன் குழும கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன் அளித்த பேட்டி:

கடந்த சில ஆண்டுகளாக, பொறியியல் படித்தவர்களுக்கான வாய்ப்புகள் குறைந்தது போன்று தோன்றினாலும், ஐ.டி., துறை வாய்ப்புகள் தற்போது அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இன்றும் எங்கள் கல்வி நிறுவனத்தில் நடைபெறும் வளாக நேர்காணல்களில் 40 சதவீத இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு ஐ.டி., நிறுவனங்கள் வாய்ப்பளிக்கின்றன.

முதல் ஆண்டிலிருந்தே மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. துறை சார்ந்த புரொபஷனல் அமைப்புகளின் மூலமாக, மாணவர்களை ‘இன்டஸ்டிரியல் விசிட்’ அழைத்துச் செல்கிறோம். தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒழுக்கத்துடன் தரமான கல்வி அளிப்பதன்மூலமே மாணவர்களுக்கு சிறப்பான வாழ்க்கையை அமைத்துத்தர முடியும்.

கல்லூரி வளாகம் முழுவதும் இன்டர்நெட் வசதி, மொழி ஆய்வகம், ஆடியோ - விசுவல் பயிற்சி, துறை சார்ந்த ஆய்வகங்கள் மற்றும் சர்வதேச இதழ்கள் அடங்கிய நூலகம் உட்பட ஏராளமான வசதிகள் இடம்பெற்றுள்ளன. மாணவர்களுக்கு ’சாப்ட் ஸ்கில்ஸ்’ மற்றும் ‘பர்சனாலிட்டி டெவலப்மென்ட்’ பயிற்சி அளிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் கவுன்சில் விருதினையும் பெற்றுள்ளோம்.

என்.எஸ்.எஸ்., விளையாட்டுகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்க உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. கல்லூரி நாட்களில் தினமும் முதல் ஒரு மணிநேரம் மாணவ, மாணவியருக்கு தொடர் மதிப்பீட்டு தேர்வு நடத்தப்படுகிறது. தினம் ஒரு பாடம் இதில் இடம்பெறும். இதன்மூலம், மாணவர்கள் தாங்கள் கற்றதை முழுமையாக நினைவில் வைத்துக்கொள்ளவும், தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ளவும் முடியும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us