‘கல்வியை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது’ | Kalvimalar - News

‘கல்வியை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது’

எழுத்தின் அளவு :

 

இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ் அளித்த பேட்டி:

1960களில் குறைவான அரசு கல்வி நிறுவனங்களும், மிகக்குறைந்த அளவிலான தனியார் கல்வி நிலையங்களுமே இருந்தன. அந்த காலக்கட்டத்தில் தொழிற்சார்ந்த் படிப்புகளுக்காக உருவாக்கப்பட்டு, இன்று பல்வேறு கல்வி நிலையங்களை தன்னகத்தே கொண்டுள்ளது இந்துஸ்தான் பல்கலைக்கழகம்.

ஒவ்வொரு கல்வி நிறுவனத்திற்கும் மாணவரை திறம்பட உருவாக்குவதற்கான பொறுப்பு உள்ளது. வழக்கமான பாடத்திட்டங்களைக் கடந்து, தொழில் நிலையங்களுக்கு ஏற்ற பாடத்திட்டங்களை அமைத்துக்கொடுப்பதன் மூலம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு எளிதில் கிடைக்கிறது. அதனால்தான் தனிச்சிறப்பு வாய்ந்த பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறோம். தரமான கல்வியை வழங்குவதால் கொரியா, ஆப்பிரிக்கா, பூடான், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு படிங்கின்றனர்.

மாணவர்கள் கல்லூரியில் சேரும்போது, எந்தத்துறை சிறந்து விளங்குகிறதோ அதனை தேர்ந்தெடுக்கின்றனர். அது மிகவும் தவறு. புத்தகத்திற்கு அப்பால் சிந்திப்பதே வளர்ச்சிக்கு உதவும். ஒரே இடத்தில் நிலை பெறாமல், வளர்ச்சிக்கான பாதையில் செல்ல முயற்சிக்க வேண்டும்.

உற்பத்தித்துறை வளர்ச்சி அடைந்தால்தான் நாடு வளர்ச்சி பெறும். பாதுகாப்புத்துறை சார்ந்த தடவாளங்கள் பலவற்றை இறக்குமதி செய்யும் நிலைதான் இந்தியாவில் உள்ளது. நம்மால் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியும். அதனால், இறக்குமதியை ஊக்கப்படுத்தாமல், உற்பத்தியை அதிகப்படுத்தினால் வேலைவாய்ப்புப் பெருகும். நமது வாய்ப்புகளை பிற நாடுகளுக்கு விட்டுக்கொடுக்கக்கூடாது.

உலக அளவில் வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்பொழுது இந்தியாவில் நானோ துறை சார்ந்த ஆராய்ச்சிகள் மிகவும் குறைவு. ஆராய்ச்சித்துறை வளர்ச்சி பெறுவதற்கும், புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பெறுவதற்கும், கல்வி நிறுவனங்களோடு இணைந்து செயல்பட நிறுவனங்கள் முன் வரவேண்டும். வெளிநாடுகளில் பெரிய நிறுவனங்கள் கல்வி நிலையங்களோடு இணைந்து செயல்படும் நிலை உள்ளது. அந்த நிலை இங்கும் வரும்பொழுது ஆராய்ச்சிகள் அதிகரிக்கும்.

படித்து முடித்தவுடன் இங்கு வேலை வாய்ப்பில்லையே என்று மாணவர்கள் கவலைப்படக்கூடாது. வேலைவாய்ப்பு பெறுபவர்களாக இல்லாமல் வேலைவாய்ப்பினை வழங்குபவர்களாக உருவாக வேண்டும். மாணவர்கள் படிப்பினை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. தங்களை சிறப்பான முறையில் தயார் செய்து, கடினப்பட்டு படித்தால் வேலைவாய்ப்பு குறித்து கவலைப்படத் தேவையில்லை.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us