ஹோட்டல் மேனேஜ்மென்ட் | Kalvimalar - News

ஹோட்டல் மேனேஜ்மென்ட்

எழுத்தின் அளவு :

இந்தியாவில் சுற்றுலா துறை வெகுவேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் ஹோட்டல்களின் எண்ணிக்கையும் பெருகுகிறது. இதனால் நட்சத்திர ஹோட்டல்களில் சமையல் பணிபுரியும் "செப்களின் தேவையும் உயர்ந்துள்ளது.

"கேட்டரிங்" எனப்படும் சமையல் பணி தற்போது அதிக சம்பளம் தரும் வேலையாக உள்ளது. நட்சத்திர ஹோட்டல்களில் பணிபுரியும் போது வெவ்வேறு வகையான உணவுகளை, பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்றபடி சமைத்து வழங்கும் வாய்ப்பு கிடைக்கிறது. உணவைருசியாக சமைத்தால் மட்டும் போதாது. அதை பரிமாறும் முன் சிறப்பாக "டிசைன்" செய்து பரிமாற வேண்டியது அவசியம். சமையலிலும் கிரியேட்டிவிட்டியை பயன்படுத்துபவரே சிறந்த "செப்" ஆக முடியும். தனியாக "கேட்டரிங்" மட்டும் படிப்பதை விட ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பதே சிறந்தது. ஹோட்டல் பற்றிய முழுமையான அறிவை இதன் மூலம் பெற முடியும்.

"செப்" ஆக பிரகாசிக்க வேண்டுமெனில்

1. கடினமாக உழைக்க தயாராக இருக்க வேண்டும்.

2. சோதனை முயற்சிகளை கைவிட கூடாது.

3. வெவ்வேறு வகையான வாடிக்கையாளர்களை கையாள பொறுமை அவசியம்.

4. சுத்தத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இந்தியாவில் மக்கள் தொகையும், வருமானமும் அதிகரித்த படி இருக்கிறது. எனவே உணவுக்கான தேவை எப்போதும் குறையப்போவதில்லை. குறிப்பாக கணவன், மனைவி இருவரும் வேலை செய்யும் சூழல் இருப்பதால் இன்று ஹோட்டல்களை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதிதாக டிரைனி "செப்"ஆக பணிபுரிபவர்களுக்கே ரூ. 5 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. திறமைக்கு ஏற்றபடி ஒரு வருடத்தில் சம்பளத்தை 15 ஆயிரமாக கூட அதிகரிக்கின்றனர்.

ஹோட்டல்களில் மட்டுமின்றி கப்பல்கள், கிளப்புகள், ஆஸ்பத்திரிகள், "பாஸ்ட் புட்"விடுதிகள் என பல இடங்களில் "செப்"கள் பணியாற்றலாம். ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து உள்ளதால், "செப்"கள் சத்தான உணவுவகைகளையே சமைக்க வேண்டும்.

"செப்" ஆக சாதிக்க வேண்டுமெனில் கல்வித்தகுதி மட்டும் போதாது. அனுபவ அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். நட்சத்திர ஹோட்டல்களில் "அப்ரன்டீஸ் செப்" ஆக நுழைபவர்கள், "எக்ஸ்கியூட்டிவ் செப்" தலைமை ஏற்கும் முன் பல படிகளை கடக்க வேண்டும். 10 முதல் 12 ஆண்டுகள் வரை கடினமாக உழைக்க தயாராக இருப்பவர்கள்லட்சகணக்கில் சம்பாதிக்க முடியும்.

இந்த துறையில் உள்ள சாதகங்கள்

1. பெரிய ஹோட்டல்களில் பணிபுரிய வாய்ப்பு கிடைப்பதால் முக்கிய மனிதர்களில் பழக்கம் கிடைக்கும்.

2. வெளிநாடுகளில் மிகவும் மதிக்கப்படும் ஒரு துறையாக இது உள்ளது.

3. சமையல் செய்வதால் மனஅழுத்தம் குறைகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

சமையலில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருப்பது உண்மை.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us