பிலிம் மற்றும் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா | Kalvimalar - News

பிலிம் மற்றும் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாஅக்டோபர் 15,2021,14:41 IST

எழுத்தின் அளவு :

சினிமா மற்றும் தொலைக்காட்சி சாரந்த படிப்புகளுக்கான நாட்டின் முன்னணி கல்வி நிறுவனம், மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் கீழ் புனேவில் செயல்படும் பிலிம் மற்றும் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா!




வழங்கப்படும் படிப்புகள்:



சினிமா சார்ந்த பாடப்பிரிவுகள்:


டைரக்சன் மற்றும் ஸ்கிரீன்பிளே ரைட்டிங்


சினிமாட்டோகிராபி


எடிட்டிங்


சவுண்ட் ரெக்கார்டிங் மற்றும் சவுண்ட் டிசைன்


ஆர்ட் டைரக்சன் மற்றும் புரொடக்சன் டிசைன்


ஸ்கிரீன் ஏக்டிங்


ஸ்கிரீன் ரைட்டிங் - பிலிம், டி.வி., மற்றும் வெப் சீரிஸ்




தொலைக்காட்சி சார்ந்த பாடப்பிரிவுகள்:


டைரக்சன்


எலக்ட்ரானிக் சினிமாட்டோகிராபி


வீடியோ எடிட்கிங்


சவுண்ட் ரெக்கார்டிங் மற்றும் டெலிவிஷன்  இன்ஜினியரிங்



படிப்பு நிலைகள்: பாடப்பிரிவுகளை பொறுத்து, ஓர் ஆண்டு முதல் முன்று ஆண்டுகளை வரை முதுநிலை டிப்ளமா படிப்புகளாக வழங்கப்படுகின்றன. மேலும், ஆன்லைன் வாயிலாகவும், கல்வி நிறுவன வளாகத்தில் நேரடியாகவும் குறுகிய கால சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.



கல்வித் தகுதி:


பொதுவாக, ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற போதிலும், சில படிப்புகளுக்கு குறிப்பிட்ட பாடப்பிரிவுகளை படித்திருப்பது அவசியம். சவுண்ட் ரெக்கார்டிங் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பில் இயற்பியல் படித்திருக்க வேண்டும்.



ஆர்ட் டிரைக்சன் படிப்புகளுக்கு, சிற்பக்கலை, ஓவியக்கலை, கட்டடக்கலை, அப்ளைடு ஆர்ட்ஸ், இண்டீரியர் டிசைன், பைன் ஆர்ட்ஸ் போன்ற துறைகளில் ஏதேனும் ஒன்றில் இளநிலை பட்டம் அல்லது டிப்ளமா படித்திருப்பது அவசியம். 



மாணவர் சேர்க்கை முறை: பொதுவாக, ஜே.இ.டி., எனும் ஜாயின்ட் என்ட்ரன்ஸ் டெஸ்ட் மற்றும் நேர்முகத்தேர்வு வாயிலாக தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 



உதவித்தொகை: இக்கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஏராளமான கல்வி உதவித்தொகைகளை பெறும் வாய்ப்பு உண்டு. படிப்பு மற்றும் தகுதியை பொறுத்து, ஆண்டுக்கு 500 ரூபாய் முதல் 90 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை பெறலாம். 



விபரங்களுக்கு: www.ftii.ac.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us