ஜப்பான் உதவித்தொகை | Kalvimalar - News

ஜப்பான் உதவித்தொகைநவம்பர் 11,2021,20:04 IST

எழுத்தின் அளவு :

கடந்த 1988ல் நிறுவப்பட்ட ஜப்பான் உதவித்தொகை திட்டம் - ஜே.எஸ்.பி., வளரும் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த, தகுதியான மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பை வழங்குகிறது.



முக்கியத்துவம்: 


ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில் உள்ள 37 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் 140 உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.



துறைகள்:


ஜப்பானின் தேர்ந்தெடுக்கப்பட்ட 29 கல்வி நிறுவனங்களில் பொருளாதாரம், வணிகம் மற்றும் மேலாண்மை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் பிற வளர்ச்சி தொடர்பான துறைகளில் முதுநிலை படிப்புகளை உதவித்தொகையுடன் மேற்கொள்ளலாம்.



தகுதிகள்:


*ஆசியன் டெவெலப்மெண்ட் வங்கியின் உறுப்பினர் மற்றும் ஜாப்பனீஷ் உதவித்தொகைக்கு தகுதியான நாட்டைச் சேர்ந்த குடிமகனமாக இருக்க வேண்டும்.


* குறிப்பிடப்பட்ட கல்வி நிறுவனங்களில் தகுதியான படிப்பில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.


* இளநிலை பட்டப்படிப்புடன் சிறந்த மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.


* குறைந்தது 2 ஆண்டுகள் முழுநேர பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


* 35 வயதிற்குள் மிகாமல் இருக்க வேண்டும். சில குறிப்பிட்ட பிரிவினருக்கு 45 வயதுவரை விலக்கு உண்டு.


* நல்ல உடல் நலம்.


* படிப்பு காலம் முடிந்ததும் சொந்த நாட்டிற்கு திரும்ப செல்ல வேண்டும்.



உதவித்தொகை விபரம்: 


* முழுமையான கல்விக்கட்டணம்


* தங்குமிடத்திற்கான மாதாந்திர செலவு


* புத்தகங்கள் மற்றும் கல்வி கற்பதற்கான செலவினங்கள்


* மருத்துவக் காப்பீடு


* போக்குவரத்து செலவு ஆகிய செலவினங்கள் இந்த உதவித்தொகை திட்டத்தில் வழங்கப்படுகின்றன. 



மேலும், ஆராய்ச்சி மேற்கொள்பவர்களுக்கு இதர செலவினங்களுக்கும் இத்திட்டத்தில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.



விபரங்களுக்கு: https://www.adb.org/work-with-us/careers/japan-scholarship-program



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us