டேட்டா சயின்ஸ் அண்டு மேனேஜ்மெண்ட் படிப்பு | Kalvimalar - News

டேட்டா சயின்ஸ் அண்டு மேனேஜ்மெண்ட் படிப்புடிசம்பர் 17,2021,06:26 IST

எழுத்தின் அளவு :

வணிகம் சார்ந்த சிக்கல்களுக்கு தீர்வு காண, இன்றைய காலக்கட்டட்த்தில் 'டேட்டா சயின்ஸ்’ நுட்பங்களை அறிந்துகொள்வது மிகவும் அவசியமாகியுள்ளது. 



இத்தகைய சூழலில்,  'மாஸ்டர் ஆப் சயின்ஸ் இன் டேட்டா சயின்ஸ் அண்ட் மேனேஜ்மெண்ட்’எனும் படிப்பை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, இந்தூர் மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட், இந்தூர் இணைந்து ஆன்லைன் வாயிலாக வழங்குகிறது. 



நோக்கம்: வணிகத்தில் சிறந்த முடிவுகளை மேற்கொள்ளும் வகையில் மாணவர்களை தயாராக்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இப்படிப்பிற்கான பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.



படிப்பு: எம்.எஸ்., - டேட்டா சயின்ஸ் அண்டு மேனேஜ்மெண்ட்



படிப்பு காலம்: 2 ஆண்டுகள் கொண்ட இப்படிப்பு வாரத்திற்கு 15 மணி நேரம் நேரடி ஒளிபரப்பாக வழங்கப்படுகிறது. மொத்தம் 900 மணிநேரம் வகுப்புகள் கொண்ட இப்படிப்பில், ஐ.ஐ.எம்., மற்றும் ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களை சேர்ந்த அனுபவமிக்க பேராசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். இதனுடன், 30 நாட்கள் கல்வி நிறுவன வளாகங்களிலும் கல்வி கற்பிக்கப்படுகிறது.



மாணவர் சேர்க்கை இடங்கள்: 200



பாடங்கள்: டேட்டா கட்டமைப்புகள், கணிதம் மற்றும் புள்ளியியல் முறைகள், டேட்டா மேனேஜ்மெண்ட் சிஸ்டம், மிஷின் லேர்னிங், ஆர்ட்டிபிசியல் இண்டெலிஜென்ஸ், மேனேஜெரியல் கம்யூனிகேஷன், மேனேஜெரியல் எக்னாமிக்ஸ், ஆர்கனிஷேனல் எக்னாமிக்ஸ், ஆப்ரேஷன்ஸ் அண்டு சப்ளை சயின் மேனேஜ்மெண்ட், மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட், பினான்சியல் மேனேஜ்மெண்ட், ஹுமன் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட், ஸ்டேரடெஜிக் மேனேஜ்மெண்ட், இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ், பிசினஸ் அனலெட்டிக்ஸ் உட்பட பல்வேறு பாடங்கள் இப்படிப்பில் கற்பிக்கப்படுகின்றன.



தகுதிகள்: பி.டெக்., பி.இ., பி.எஸ்., பி.பார்ம்., பி.ஆர்க்., பி.டெஸ்., நான்கு ஆண்டு பி.எஸ்சி., படிப்புகள், எம்.எஸ்சி., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., போன்றவற்றில் ஏதேனும் ஒரு படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் சி.ஏ.டி., ஜி.ஏ.டி.இ., ஜிமேட்., ஜி.ஆர்.இ., ஜே.ஏ.எம்., ஆகிய நுழைவுத்தேர்வுகளில் ஏதேனும் ஒன்றை எழுதியிருக்க வேண்டும். 



சேர்க்கை முறை: நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான மாணவர்கள் ஐ.ஐ.எம்., மற்றும் ஐ.ஐ.டி., பேராசிரியரகளால் தேர்வு செய்யப்படுவர்.



கல்விக் கட்டணம்:  இந்திய மாணவர்களுக்கு 12 லட்சம் ரூபாயும், சர்வதேச மாணவர்களுக்கு 15.6 லட்சம் ரூபாயுமாக கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



விபரங்களுக்கு: https://msdsm.iiti.ac.in/



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us