இந்திய மருத்துவப் படிப்புகள் | Kalvimalar - News

இந்திய மருத்துவப் படிப்புகள்ஜனவரி 09,2022,11:22 IST

எழுத்தின் அளவு :

சித்தா, ஆயுர்வேதா, யுனானி ஆகிய இந்திய மருத்துவப் படிப்புகள் மற்றும் ஓமியோபதி படிப்பில் சேர்க்கை பெற இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.




வழங்கப்படும் படிப்புகள்:


பி.எஸ்.எம்.எஸ்., - இளநிலை சித்த மருத்துவம் மற்றும் சிகிச்சை


பி.ஏ.எம்.எஸ்., - இளநிலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சிகிச்சை


பி.யு.எம்.எஸ்., - இளநிலை யுனானி மருத்துவம் மற்றும் சிகிச்சை


பி.எச்.எம்.எஸ்., - இளநிலை ஓமியோபதி மருத்துவம் மற்றும் சிகிச்சை




படிப்பு காலம்: ஓர் ஆண்டு இன்டர்ன்ஷிப் பயிற்சியுடன் ஐந்தரை ஆண்டுகள்.




தகுதிகள்: பிளஸ் 2 தேர்ச்சியுடன், இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ’நீட் யு.ஜி., -2021’ தேர்வை எழுதியிருக்க வேண்டும். இந்த மதிப்பெண் அடிப்படையில் தயாரிக்கப்படும் தரவரிசைப் பட்டியலின்படி மாணவர் சேர்க்கை நடைபெறும்.




கல்லூரிகள் மற்றும் இடங்கள்:


தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்கள், 


சுயநிதி கல்லூரிகளில் உள்ள 65 முதல் 85 சதவீத இடங்கள்


சிறுபான்மை சுயநிதி கல்லூரிகளில் உள்ள 50 முதல் 85 சதவீத இடங்கள் ஆகியவை தமிழக அரசால் நடத்தப்படும் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். 15 சதவீத இடங்கள் தேசிய அளவிலான மாணவர் சேர்க்கைக்கு ஒதுக்கப்படுகிறது. இதற்கு பிரத்யேகமாக விண்ணப்பிக்க வேண்டும்.




இடஒதுக்கீடு: 


பொதுப் பிரிவினர் - 31 சதவீதம்


பிற்படுத்தப்பட்டோர்- 26.5 சதவீதம்


பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) - 3.5 சதவீதம்


மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 20 சதவீதம்


பட்டியலினத்தவர்கள் - 18 சதவீதம்


பழங்குடியினர் - 1 சதவீதம்


என்ற இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.




கல்விக்கட்டணம்:


ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்ரமணியன் தலைமையில் நியமிக்கபட்ட கமிட்டி நிர்ணயித்ததன்படி, சுயநிதிக் கல்லூரிகளில் கல்விக்கட்டணம் வசூலிக்கப்படும். அதன்படி, பி.எஸ்.எம்.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.எச்.எம்.எஸ்., ஆகிய படிப்புகளில் சேர்க்கை பெறும் மாணவர்கள் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கல்விக்கட்டணமாக செலுத்த வேண்டும்.




விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் வாயிலாக விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் மற்றும் தேவையான ஆவணங்களுடன் செயலர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி, அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை இந்திய மருத்துவ வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600106 என்ற முகவரியில் நேரில் சமர்ப்பிக்கலாம் அல்லது அஞ்சல் வழியில் அனுப்பலாம். 




விபரங்களுக்கு: https://tnhealth.tn.gov.in/


Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us