இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ரிமோட் சென்சிங் | Kalvimalar - News

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ரிமோட் சென்சிங்ஜனவரி 21,2022,11:24 IST

எழுத்தின் அளவு :

ரிமோட் சென்சிங் மற்றும் ஜியோஇன்பர்மேட்டிக்ஸ் தொழில்நுட்பத்தின் பயனை சர்வதேச அளவில் சென்றடையச் செய்யும் நோக்கில் துவக்கப்பட்ட நிறுவனம், ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ரிமோட் சென்சிங்’!



முக்கியத்துவம்:


1966ல் போட்டோ-இன்டர்பிரிடேஷன் இன்ஸ்டிடியூட் எனும் பெயரில் டேராடூனில் துவக்கப்பட்ட இந்நிறுவனம், 1972ம் ஆண்டில் தற்போதைய பெயரைப் பெற்றது. ’இஸ்ரோ’ எனும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் கீழ் இயங்கி வரும் இந்நிறுவன்வம், ரிமோட் சென்சிங், புவியியல் நுட்பம், இயற்கை வளங்கள் சுற்றுச்சூழல் மற்றும் டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் உட்பட பல்வேறு துறைகளில் ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்தோடு பயிற்சிகளை வழங்குகிறது.




வழங்கப்படும் படிப்புகள்: 




முதுநிலை டிப்ளமா படிப்பு: 


* போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் ரிமோட் சென்சிங் அண்டு ஜி.ஐ.எஸ்.,




பிரிவுகள்: அக்ரிகல்ச்சர் மற்றும் சாயில்ஸ், பாரஸ்ட் ரிசோசர்சஸ் அண்டு இகோசிஸ்டம் அனலைசிஸ், ஜியோசயின்சஸ், நேச்சுரல் ஹசார்ட்ஸ் அண்டு டிசாஸ்டர் ரிஸ்க் மேனேஜ்மெண்ட், அர்பன் அண்டு ரீஜினல் ஸ்டடீஸ், மரைன் அண்டு அட்மோஸ்பெரிக் சயின்சஸ், சேட்லைட் இமேஜ் அனலைசிஸ் அண்டு போட்டோகிரமேட்ரி, வாட்டர் ரிசோசர்சஸ், ஸ்பேஷல் டேட்டா சயின்ஸ்.



* போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் ஜியோஇன்பர்மேஷன் சயின்ஸ் அண்டு எர்த் அப்ஷர்வேஷன்



முதுநிலை பட்டப்படிப்பு: 


* எம்.டெக் இன் ரிமோட் சென்சிங் அண்டு ஜி.ஐ.எஸ்.,




பிரிவுகள்: அக்ரிகல்ச்சர் மற்றும் சாயில்ஸ், பாரஸ்ட் ரிசோசர்சஸ் அண்டு இகோசிஸ்டம் அனலைசிஸ், ஜியோசயின்சஸ், நேச்சுரல் ஹசார்ட்ஸ் அண்டு டிசாஸ்டர் ரிஸ்க் மேனேஜ்மெண்ட், அர்பன் அண்டு ரீஜினல் ஸ்டடீஸ், மரைன் அண்டு அட்மோஸ்பெரிக் சயின்சஸ், சேட்லைட் இமேஜ் அனலைசிஸ் அண்டு போட்டோகிரமேட்ரி, வாட்டர் ரிசோசர்சஸ், ஜியோஇன்பர்மேடிக்ஸ்.



* எம்.எஸ்சி., இன் ஜியோ-இன்பர்மேஷன் சயின்ஸ் அண்டு எர்த் அப்ஷர்வேஷன். 



மேலும், பல்வேறு டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளை வழங்குவதோடு, இந்திய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சி படிப்பையும் வழங்குகிறது. தொலைநிலைக்கல்வி முறையிலும், ஆன்லைன் வாயிலாகவும் படிப்புகள் வழங்கப்படுகின்றன.



தகுதிகள்:


பொதுவாக, இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ், கணிதம், புவியியல், ஐ.டி., கம்ப்யூட்டர் அறிவியல், புவியமைப்பியல், புவி இயற்பியல், ஜியோ- இன்ஜினியரிங், விவசாயம், நகர்ப்புற சுற்றுச்சூழல் போன்ற ஏதேனும் ஒரு துறையில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எனினும், படிப்பிற்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும்.



சேர்க்கை முறை:


முதுநிலை பட்டப்படிப்புகள், எழுத்து, நேர்முகத் தேர்வு மற்றும் கல்வி செயல்திறன் அடிப்படையிலும், முதுநிலை டிப்ளமோ படிப்புகள், கல்வி செயல்திறன் மற்றும் தகுதி பட்டியல் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.



விபரங்களுக்கு: www.iirs.gov.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us