சமஸ்கிருத படிப்புகள் | Kalvimalar - News

சமஸ்கிருத படிப்புகள்ஏப்ரல் 14,2022,19:36 IST

எழுத்தின் அளவு :

புதுடில்லியில் உள்ள ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் பி.எட்., எம்.எட்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சிறப்பு சட்டத்தீன் கீழ், இப்பல்கலைக்கழகம் மத்திய பல்கலைக்கழகமாக அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




படிப்புகள்: 


சிக்‌ஷா சாஸ்திரி - பி.எட்., 


சிக்‌ஷா ஆச்சார்யா - எம்.எட்., 


வித்யவரிதி - பிஎச்.டி., பாரம்பரிய பாடப்பிரிவுகள், எஜுகேஷன் மற்றும் யோகா 



தகுதிகள்:


பி.எட்., படிப்பிற்கு சாஸ்திரி - பி.ஏ., சமஸ்கிருதம் அல்லது ஆச்சார்யா - எம்.ஏ., சமஸ்கிருதம் படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 20 வயதிற்குள் குறையாமல் இருக்க வேண்டும். 



எம்.எட்., படிப்பிற்கு, இளநிலை பட்டப்படிப்பில் சிக்‌ஷா சாஸ்திரி- பி.ஏ., சம்ஸ்கிருதம் மற்றும் சிக்‌ஷா சாஸ்திரி -பி.எட்., படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 22 வயதிற்குள் குறையாமல் இருக்க வேண்டும்.



பிஎச்.டி., படிப்பிற்கு துறை சார்ந்த எம்.ஏ., படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 



அனைத்து படிப்புகளிலும் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., ஆகிய பிரிவினர்களுக்கு 5 சதவீத மதிப்பெண் விலக்கு அளிக்கப்படும்.



தேர்வு முறை: 


பல்கலைக்கழகம் நடத்தும் பிரத்யேக நுழைவுத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது. ஜே.ஆர்.எப்., தேர்ச்சி அடைந்த மாணவர்கள் பிஎச்.டி., படிப்பிற்கான நுழைவுத்தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் இட ஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படுகிறது.



விண்ணப்பிக்கும் முறை: பல்கலைக்கழகத்தின் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். 



விபரங்களுக்கு: www.slbsrsv.ac.in


 



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us