சிறப்பு படிப்புகள் | Kalvimalar - News

சிறப்பு படிப்புகள்ஜூன் 04,2022,12:25 IST

எழுத்தின் அளவு :

மாற்றுத்திறனாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மறுவாழ்வு அளிக்கும் வகையில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் கல்வி நிறுவனங்களில் டிப்ளமா, சான்றிதழ், பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.



அத்தகைய கல்வி நிறுவனங்கள்:


1. நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் லொக்கமோடார் டிசெபிலிட்டீஸ் - என்.ஐ.எல்.டி.,- கொல்கத்தா



2. சுவாமி விவேகானந்தா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ரீகேபிலிடேஷன் டிரைனிங் அண்டு ரிசர்ச் - சி.வி.என்.ஐ.ஆர்.டி.ஏ.ஆர்., - ஒடிசா



3. நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் எம்பவர்மெண்ட் ஆப் பர்சன்ஸ் வித் மல்டிபில் டிசெபிலிட்டீஸ் - என்.ஐ.இ.பி.எம்.டி., - சென்னை



4. பண்டிட் தீனதயாள் உபதயா நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் பர்சன்ஸ் வித் பிசிக்கல் டிசெபிலிட்டீஸ் - பி.டி.யு.என்.ஐ.பி.பி.டி., - புதுடில்லி



5. அலி யவார் ஜங் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பீச் அண்டு ஹியரிங் டிசெபிலிட்டீஸ் - ஏ.ஒய்.ஜே.என்.ஐ.எஸ்.எச்.டி., - மும்பை



6. நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் தி எம்பவர்மெண்ட் வித் விசுவல் டிசெபிலிட்டீஸ் - என்.ஐ.இ.பி.வி.டி., - டேராடூன்



7. நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் தி எம்பவர்மெண்ட் ஆப் பர்சன்ஸ் வித் விசுவல் டிசெபிலிட்டீஸ் - என்.ஐ.இ.பி.ஐ.டி., - செகந்தராபாத்



8. இந்தியன் சைன் லேங்குவேஜ் ரிசர்ச் அண்டு டிரைனிங் சென்டர் - ஐ.எஸ்.எல்.ஆர்.டி.சி., - புதுடில்லி



9. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மென்டல் ஹெல்த் அண்டு ரீகேபிலிடேஷன் - என்.ஐ.எம்.எச்.ஆர்., - மத்திய பிரதேசம்.



பொது நுழைவுத்தேர்வு: இவற்றில் கொல்கத்தாவில் செயல்படும் 'நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் லொக்கமோடார் டிசெபிலிட்டீஸ்’ கல்வி நிறுவனம் மருத்துவம் சார்ந்த இளநிலை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வை நடத்துகிறது. 



இத்தேர்வின் அடிப்படையில் மேலே பட்டியலிடப்பட்டுள்ள முதல் 4 தேசிய கல்வி நிறுவனங்களில் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.



வழங்கப்படும் படிப்புகள்:


* பேச்சுலர் ஆப் பிசியோதெரபி - பி.பி.டி.,


* பேச்சுலர் ஆப் ஆக்குபேஷனல் தெரபி - பி.ஓ.டி.,


* பேச்சுலர் ஆப் புரொஸ்தெடிக் அண்டு ஆர்த்தோடிக்ஸ் - பி.பி.ஓ.,



தகுதிகள்: படிப்பிற்கு ஏற்ப கல்வித்தகுதிகள் சற்று மாறுபடும். பொதுவாக, இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு மதிபெண்களில் தளர்வு உண்டு.



விபரங்களுக்கு: www.niohkol.nic.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us