காமன் அட்மிஷன் டெஸ்ட் | Kalvimalar - News

காமன் அட்மிஷன் டெஸ்ட் செப்டம்பர் 13,2022,15:37 IST

எழுத்தின் அளவு :

நாட்டிலுள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் மேலாண்மை படிப்புகளில் சேர்க்கை பெற எழுத வேண்டிய பொது நுழைவுத்தேர்வான கேட் எனும் காமன் அட்மிஷன் டெஸ்ட் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களால் நடத்தப்படுகிறது.




முக்கியத்துவம்: 


முற்றிலும் ஆன்லைன் வாயிலாக நடைபெறும் இத்தேர்வில், பங்கேற்று அதிக மதிப்பெண் எடுப்பதன் வாயிலாக, நாட்டின் பல்வேறு நகரங்களில் செயல்படும் ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்கள் மற்றும் ஏராளமான தனியார் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மேலாண்மை படிப்புகளில் சேர்க்கை பெறலாம். 



ஐ.ஐ.எம்., வளாகங்கள்: 


அகமதாபாத், அமிர்தசரஸ், பெங்களூரு, புத்தகயா, கொல்கத்தா, இந்தூர், ஜம்மு, காஷிப்பூர், கோழிக்கோடு, லக்னோ, நாக்பூர், ராய்பூர், ராஞ்சி, ரோக்டக், சாம்பல்பூர், ஷில்லாங், சிர்மாவூர், திருச்சி, உதய்ப்பூர் மற்றும் விசாகப்பட்டினம்.



படிப்புகள்:  


பி.ஜி.பி., பி.ஜி.பி.,-எப்.ஏ.பி.எம்., இ.பி.ஜி.டி.,-ஏ.பி.ஏ., எம்.பி.ஏ., இ.எம்.பி.ஏ., பி.ஜி.பி.இ.எம்., பி.ஜி.பி.பி.ஏ., எம்.எஸ்.டி.எஸ்.எம்., பி.ஜி.பி.இ.எக்ஸ்., பி.ஜி.பி.டி.ஜி.எம்., பிஎச்.டி., எப்.பி.எம்., இ.எப்.பி.எம்., டி.பி.எம்., இ-டி.பி.எம்., உட்பட இதர படிப்புகள்



தகுதிகள்: 


ஏதேனும் ஒரு துறையில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. 



தேர்வு மையங்கள்: 


நாடு முழுவதிலும் உள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் இத்தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் உள்ள 150 மையங்களில் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஏதாவது 6 மையங்களை வரிசைப்படுத்தலாம்.



தேர்வு செய்யப்படும் முறை:  


எழுத்துத்தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களுக்கு தேர்வு செய்யப்படுவர். தேவைப்படும்பட்சத்தில் மாணவரது கல்வி செயல்திறன், பணி அனுபவம், பாலினம் மற்றும் இதர அம்சங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.



விபரங்களுக்கு: https://iimcat.ac.in/



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us