ஆரஞ்சு துலிப் உதவித்தொகை | Kalvimalar - News

ஆரஞ்சு துலிப் உதவித்தொகைஜனவரி 02,2023,12:53 IST

எழுத்தின் அளவு :

நெதர்லாந்து கல்வி ஆதரவு அலுவலகம் - என்.இ.எஸ்.ஓ., இந்தியா அமைப்பு, திறன்மிக்க இந்திய மாணவர்களுக்கு ஆரஞ்ச் துலிப் ஸ்காலர்ஷிப் திட்டத்தில் உதவித்தொகை வழங்குகிறது.




இத்திட்டத்தின் கீழ், நெதர்லாந்தில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் உதவித்தொகையுடன் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பை மேற்கொள்ளலாம்.




பாடப்பிரிவுகள்: கலை, பண்பாடு, அறிவியல், மேலாண்மை, நிர்வாகம், பொருளாதாரம், பொறியியல், மருத்துவம், துணை மருத்துவம், வேளாண்மை, நகர மேம்பாடு, சட்டம், ரோபாட்டிக்ஸ், நானோடெக்னாலஜி, டெக்ஸ்டைல் டெக்னாலஜி, சோசியல் சயின்சஸ், அப்ளைடு சயின்சஸ் உட்பட ஏராளமான துறை சார்ந்த படிப்புகளில் இந்த உதவித்தொகை திட்டத்தின் கீழ் சேர்க்கை பெறலாம். 




நெதர்லாந்து பல்கலைகழகங்கள் மற்றும் உதவித்தொகை எண்ணிக்கை:




* ரென்வார்ட் அகாடமி - 1 


* விரிஜி யுனிவர்சிட்டி ஆப் ஆம்ஸ்டர்டம் - 2


* ரட்பவுட் யுனிவர்சிட்டி - 2


* தி ஹேக் யுனிவர்சிட்டி ஆப் அப்ளைடு சயின்சஸ் 


* தில்புர்க் யுனிவர்சிட்டி - 4


* மாஸ்ச்டிரிச் ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட் - 2


* சாக்சின் யுனிவர்சிட்டி ஆப் அப்ளைடு சயின்சஸ் - 2


* யுனிவர்சிட்டி ஆப் குரொனிகென் - 2


* யுனிவர்சிட்டி ஆப் ஆம்ஸ்டர்டம் சோசியல் சயின்சஸ் - 1


* போண்ட்ஸ் யுனிவர்சிட்டி ஆப் அப்ளைடு சயின்சஸ் - 10


* பிரெடா யுனிவர்சிட்டி ஆப் அப்ளைடு சயின்சஸ் - 2


* ரோட்டர்டாம் யுனிவர்சிட்டி ஆப் அப்ளைடு சயின்சஸ் - 3


* மாஸ்ச்டிரிச் யுனிவர்சிட்டி - 4


* ஹன்ஸ் யுனிவர்சிட்டி ஆப் அப்ளைடு சயின்ஸ் - 1


* வேகனிங்கன் யுனிவர்சிட்டி ஆப் ரிசர்ச் - 10


* விட்டென்பொர்க் யுனிவர்சிட்டி ஆப் அப்ளைடு சயின்ஸ் - 8


* இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் ஸ்டடீஸ் - 2


* இன்ஸ்டிடியூட் ஆப் ஹவுசிங் அண்ட் அர்பன் டெவலெப்மெண்ட் - 1


* யுனிவர்சிட்டி மெடிக்கல் சென்டர் குரோனிங்கன் 




தகுதிகள்: இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். நெதர்லாந்து கல்வி நிறுவனங்களில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பில் 2023-24ம் ஆண்டில் சேர்க்கை பெறும் மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். பல்கலைக்கழகம் மற்றும் பாடப்பிரிவிற்கு ஏற்ப, ஐ.இ.எல்.டி.எஸ்., டோபல் போன்ற ஆங்கில மொழிப் புலமை தேர்விலும், ஜிமேட், ஜி.ஆர்.இ., போன்ற நுழைவுத்தேர்வுகளிலும் குறிப்பிட்ட மதிப்பெண்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. 




உதவித்தொகை விபரம்: படிப்பிற்கும், பல்கலைக்கழகத்திற்கும் ஏற்ப வழங்கப்படும் உதவித்தொகையும், கால அளவும் மாறுபடுகிறது. எனினும், மாணவர்களது கல்விக்கட்டணத்தில், 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரையில் அல்லது பல்கலைக்கழகத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட தொகை உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.




விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 1, 2023




விபரங்களுக்கு: www.studyinholland.nl/neso-india




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us