கோர் இன்ஜினியரிங் வாய்ப்புகள் பிரகாசம்! | Kalvimalar - News

கோர் இன்ஜினியரிங் வாய்ப்புகள் பிரகாசம்!ஜூன் 23,2023,14:19 IST

எழுத்தின் அளவு :

பள்ளியில் படிக்கும்போது, அடுத்தத்தாக என்ன படிக்க வேண்டும், எங்கு படிக்க வேண்டும் என்பதை இன்றைய மாணவர்கள் முடிவு செய்துவிடுகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் கம்ப்யூட்டர் மற்றும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த பாடப்பிரிவுகளை அதிகளவில் தேர்வு செய்கின்றனர். 



கோர் இன்ஜினியரிங் துறைகளில், ஆரம்ப கட்டத்தில் சற்று ஊதியம் குறைவாக இருந்தபோதிலும், 5 - 10 ஆண்டுகள் அனுபவம் பெறும்போது தொழில் நிறுவனங்கள் அதிக ஊதியத்தை வழங்குகின்றன. ஆனால், அத்தகைய காலம் அனுபவம் பெற இன்றைய மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் பொறுமை இல்லை. ஆதலால், பெரும்பாலான மாணவர்கள் கம்ப்யூட்டர் துறையையே தேர்வுகின்றனர். ஐ.டி., துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இன்று அதிகளவில் இருக்கும்போதிலும், கோர் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான வாய்ப்புகளும் பிரகாசமாகவே உள்ளன என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.



மாற்றம் காணும் இன்ஜினியரிங்



இன்றைய காலக்கட்டத்தில், இன்ஜினியரிங் துறை வெகுவாக மாற்றம் கண்டுவருகிறது. முன்பு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர்கள், அவர்கள் துறை சார்ந்த பாடங்களை மட்டுமே படித்தனர். தற்போது, இதர துறைகள் சார்ந்த திறன்களையும் வளர்த்துக்கொண்டால் மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை உருவாகி உள்ளது. ஆகவே, எந்த பாடப்பிரிவை படித்தாலும், பல்துறை அறிவை இன்றைய மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். 



கடந்த 12 ஆண்டுகளில் சிறிய விமான நிலையங்கள் அதிகரித்துள்ளன. ஏற்கனவே இருந்த சிறிய விமான நிலையங்கள் விரிவுபடுத்துப்பட்டு வருகின்றன. மத்திய அரசு ஏராளமான நிதி உதவியை 'ஏவியேஷன்’ துறைக்கு அளிப்பதால், 10 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட போயிங் விமானங்களை வாங்க உள்ளோம். அதிக விமானங்கள் வரும்போது, அதிக நகரங்கள் இணைக்கப்படும். சாமானியர்களும் விமானத்தில் சென்றுவரும் வகையிலான புரட்சி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பராமரிப்பு பணிகள் அதிகரிக்கும். 'மேக் இன் இந்தியா’ போன்ற திட்டங்களால், வரும் காலங்களில் இந்தியாவிலேயே விமானங்கள் தயாரிக்கும் சூழலும் உருவாகும். 



சிவில் இன்ஜினியரிங் துறையை பொறுத்தவரை, டிப்ளமா மற்றும் இன்ஜினியரிங் நிலை படிப்புகளுக்கான ஆரம்பகட்ட வேலை வாய்ப்புகள் ஒரே மாதிரியாகவே உள்ளன. ஆகவே, சிவில் இன்ஜினியரிங்கில் நவீன தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டியது, இன்ஜினியரிங் மாணவர்களுக்கு அவசியமானது. 



மத்திய அரசு தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க பல்வேறு உதவிகளை செய்கின்றன. நிதி உதவியை கல்வி நிறுவனங்களின் வாயிலாகவும் வழங்குகின்றன. இளம் தொழில்முனைவார்களுக்கு தேவையான பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் அரசு வழங்குகின்ற்ன. மேலும், மாணவர்களின் சிறந்த திட்டங்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களும் நிதி உதவி அளிக்கின்றன. 



- கிருஷ்ணகுமார், செயலர், நேரு கல்வி நிறுவனங்கள், கோவை.




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us