மாற்று மருத்துவ படிப்புகள் | Kalvimalar - News

மாற்று மருத்துவ படிப்புகள்ஆகஸ்ட் 23,2023,17:09 IST

எழுத்தின் அளவு :

சமீபகாலமாக மிகவும் பிரபலமாகிவரும் மாற்று மருத்துவ படிப்புகளான சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி மற்றும் ஓமியோபதி படிப்புகளில், ஆர்வம் உள்ள 'நீட்’ எழுதிய மாணவர்கள் சேர்க்கை பெறலாம்.

வழங்கப்படும் படிப்புகள்:

பி.எஸ்.எம்.எஸ்., - இளநிலை சித்த மருத்துவம் மற்றும் சிகிச்சை
பி.ஏ.எம்.எஸ்., - இளநிலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சிகிச்சை
பி.யு.எம்.எஸ்., - இளநிலை யுனானி மருத்துவம் மற்றும் சிகிச்சை
பி.எச்.எம்.எஸ்., - இளநிலை ஓமியோபதி மருத்துவம் மற்றும் சிகிச்சை

படிப்பு காலம்: ஓர் ஆண்டு இன்டர்ன்ஷிப் பயிற்சியுடன் ஐந்தரை ஆண்டுகள்.

தகுதிகள்:
12ம் வகுப்பில் அறிவியல் பாடங்களில் உரிய மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பதுடன், ’நீட் யு.ஜி., -2023’ தேர்விலும் தேவையான மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்படும் தரவரிசைப் பட்டியலின்படி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

கல்லூரிகள் மற்றும் இடங்கள்:

அரசு கல்லூரிகளில் உள்ள இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் உள்ள 65 முதல் 85 சதவீத இடங்கள், சிறுபான்மை சுயநிதி கல்லூரிகளில் உள்ள 50 முதல் 85 சதவீத இடங்கள் ஆகியவை தமிழக அரசால் நடத்தப்படும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது. 15 சதவீத இடங்கள் தேசிய அளவிலான மாணவர் சேர்க்கைக்கு ஒதுக்கப்படுகிறது. இதற்கு பிரத்யேகமாக விண்ணப்பிக்க வேண்டும்.

இடஒதுக்கீடு:

பொதுப் பிரிவினர் - 31 சதவீதம்
பிற்படுத்தப்பட்டோர்- 26.5 சதவீதம்
பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) - 3.5 சதவீதம்
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 20 சதவீதம்
பட்டியலினத்தவர்கள் - 18 சதவீதம்
பழங்குடியினர் - 1 சதவீதம்
என்ற இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

கல்விக்கட்டணம்:

தனியார் கல்வி நிறுவனங்களில் பி.எஸ்.எம்.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.எச்.எம்.எஸ்., ஆகிய படிப்புகளில் சேர்க்கை பெறும் மாணவர்கள், கல்விக்கட்டணம் மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். அரசு கல்லூரிகளில் கல்விக்கட்டணம் மிகவும் குறைவு என்பதையும் மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
https://tnhealth.tn.gov.in/notifications.php எனும் இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் மற்றும் தேவையான ஆவணங்களுடன் செயலர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி, அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை இந்திய மருத்துவ வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600106 என்ற முகவரியில் நேரில் சமர்ப்பிக்கலாம் அல்லது அஞ்சல் வழியில் அனுப்பலாம்.

விபரங்களுக்கு: https://tnhealth.tn.gov.in/


Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us