தரவரிசை முக்கியம் | Kalvimalar - News

தரவரிசை முக்கியம்செப்டம்பர் 16,2023,16:02 IST

எழுத்தின் அளவு :

ஆன்லைன் வர்த்தக தளங்களில் ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பாக, அப்பொருளின் தரம், மதிப்பு, அதே பொருளை வாங்கியவர்கள் அளித்த அனுபவங்கள் குறித்து ஆய்வு செய்கின்றனர். அவ்வாறு, ரேட்டிங் மற்றும் ரேங்கிங் அடிப்படையில் அந்த பொருளை வாங்கலாமா, வேண்டாமா என்று முடிவு செய்கின்றனர். 



ஒரு பொருளுக்கே அத்தகைய ஆய்வு தேவைப்படும் நிலையில், தங்களது எதிர்கால வாழ்க்கையை வளமானதாக மாற்றும் உயர்கல்வியை தேர்வு செய்யும் போது, தரமான கல்வி நிறுவனங்களை தேர்வு செய்ய, ரேட்டிங் மற்றும் ரேங்கிங் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பதில் எந்த தவறும் இல்லை. 



ஆயிரம் பல்கலைக்கழங்கள் உள்ள நம் நாட்டில் சரியான கல்வி நிறுவனங்களை தேர்வு செய்வதற்கு, அரசு மற்றும் தனியார் அமைப்புகளின் தரவரிசையை பரிசீலனையில் கொள்வது சரியானதே. அந்தவகையில், என்.ஐ.ஆர்.எப்., நாக்., என்.பி.ஏ., போன்றவற்றின் ரேங்கிங் மற்றும் ரேட்டிங்கை கவனத்தில் கொள்வது சிறந்தது.



டிஜிட்டல் மாற்றம்



யுடிப், பேஸ்புக் உட்பட சோசியல் மீடியாக்கள் மற்றும் இணையதளங்களில் கொட்டிக் கிடக்கும் ஏராளமான தகவல்களை இன்றைய மாணவர்கள் மிக எளிதில் அணுகும் சூழலில், கல்வி நிறுவனங்களும் மாணவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நவீன தொழில்நுட்ப வசதிகளை பெற வேண்டும். சில நேரங்களில் பாரம்பரியமிக்க கல்வி நிறுவனங்கள் இன்றைய மாணவர்களின் நவீன தொழில்நுட்ப தேவையையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய தவறி விடுகின்றன. 



டிஜிட்டல் மாற்றத்திற்கு ஏற்ப, நவீன தொழில்நுட்ப உபகரணங்களுடன், டிஜிட்டலால் இணையக்கப்பட்ட வசதிகள் நிறைந்த வகுப்பறைகள் மற்றும் விடுதிகளை கல்வி நிறுவனங்கள் பெற வேண்டும். ஒரு முழுமையான கல்வி அனுபவத்தை வழங்கும் எல்.எம்.எஸ்., எனும் லேர்னிங் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் சிறப்பான முறையில் பயன்படுத்தப்படுவதோடு, தேர்வு முடிவுகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும். இறுதியாக, மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு ஏதுவான அனைத்து வசதி, வாய்ப்புகளையும் கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும். 



உளவியல் தேர்வு



இயற்கையாகவே, மாணவர்கள் பலதரப்பட்ட குணநலன்கள் கொண்டவர்களாக இருப்பர். அவரவர்களுக்கு ஏற்ற படிப்பை அறிந்துகொள்ளும் வகையில், கல்வி நிறுவனங்கள் இலவசமாக சைக்கோமெட்ரிக் தேர்வுகளை மாணவர்களுக்கு வழங்கலாம். மாணவர்கள் தங்களின் குணநலன்கள், பலம் மற்றும் பலவீனத்திற்கு ஏற்ப, சரியான துறையை தேர்வு செய்ய அவை உதவியாக இருக்கும்.



உதாரணமாக, அதிகம் பேசும் திறன், வெளிப்படையாகவும், எளிதாகவும் மற்றவர்களுடன் பழகும் குணம் கொண்டவர்களுக்கு மார்க்கெட்டிங், சட்டம் போன்ற துறைகள் சரியானதாக அமையும். அதேபோல், அதிகம் பேசாத, உள்ளார்ந்த சிந்தனை கொண்டவர்கள் கோடிங், கம்ப்யூட்டர் சார்ந்த பணிகளை மேற்கொள்வது சரியாக இருக்கும். இவற்றிற்கு மாறான துறையில் பணிபுரியும்போது, அவற்றில் பிராகசிக்க கடுமையாக போராட வேண்டியிருக்கும். ஆகவே, அவரவரது சாதக, பாதங்களை உணர்ந்து பாடப்பிரிவை தேர்வு செய்ய கல்வி நிறுவனங்கள் உதவ வேண்டும்.




-டாக்டர் விகாஸ், துணைவேந்தர், கீதா பல்கலைக்கழகம், ஹரியானா.




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us